TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

செய்தி வெளியீடு

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு

2026-2027 ஆம் ஆண்டு கலந்தாய்வுக்கான தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் 14.08.2026 அன்று நிறைவடைந்த நிலையில், மாணவர்களின் நலன் கருதி நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் 31.08.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விரிவான சுருக்கம்

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 132 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும் 277 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களும் இயங்கி வருகின்றன. சென்ற ஆண்டுகளில் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களில் 95% பேர் பல முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். தொழிற்சாலைகளில் திறன் பெற்ற தொழிலாளர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் அதிக அளவில் தொழிற்சாலைகள் உள்ளதாலும், பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் செயல்படுவதாலும் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்றவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கிறது. குறைந்த பட்சம் ரூ 20,000 முதல் மாணவர்களின் திறனுக்கேற்றவாறு ரூ 30,000 வரை மாதச் சம்பளம் கிடைக்கிறது. எட்டாம் வகுப்பு/ பத்தாம் வகுப்பு முடித்து விட்டு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்கள் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் போதே தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தனித் தேர்வாக தேர்ச்சி பெற்றால் பத்தாம் வகுப்பு/பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழையும் பெறலாம். தொழிற்பயிற்சி நிலையங்களில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பாலிடெக்னிக்குகளில் இரண்டாமாண்டு டிப்ளமோ படிப்பிலும் சேரலாம். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் இன்றைய தொழிற்சாலைகளுக்கு தேவையான அனைத்து தொழிற்பிரிவுகளிலும் பயிற்சி வழங்கப்படுவதோடு தொழில் 4.0 உள்ளிட்ட பல நவீன தொழிற்பிரிவுகளிலும் தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சிக் கட்டணம் இல்லை. கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.750/- வழங்கப்படும். அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களுக்கு தமிழ் புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டங்களின் கீழ் ரூ 1000/- கூடுதலாக வழங்கப்படும். தமிழ்நாடு அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி, விலையில்லா சீருடை, விலையில்லா மூடு காலணிகள் (Shoes), விலையில்லா பயிற்சிக்கான கருவிகள், கட்டணமில்லா பேருந்து வசதி ஆகிய அனைத்தும் வழங்கப்படும். குறிப்பிட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் விடுதி வசதியும் உள்ளது. மாணவர்கள் கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் சென்று விரும்பும் தொழிற்பிரிவை தேர்வு செய்யலாம். ஐயம் ஏற்பட்டால் அலைபேசி எண்ணில் (9499055642) தொடர்பு கொள்ளலாம்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் 31.08.2026 வரை நீட்டிப்பு.
  • 2
    தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சிக் கட்டணம் இல்லை.
  • 3
    கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.750/- வழங்கப்படும்.
  • 4
    அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களுக்கு தமிழ் புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டங்களின் கீழ் ரூ 1000/- கூடுதலாக வழங்கப்படும்.
  • 5
    விலையில்லா மிதிவண்டி, சீருடை, மூடு காலணிகள், பயிற்சிக்கான கருவிகள், கட்டணமில்லா பேருந்து வசதி வழங்கப்படும்.
  • 6
    தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் போதே தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தனித் தேர்வாக தேர்ச்சி பெற்று பத்தாம் வகுப்பு/பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழையும் பெறலாம்.
  • 7
    தொழிற்பயிற்சி நிலையங்களில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பாலிடெக்னிக்குகளில் இரண்டாமாண்டு டிப்ளமோ படிப்பிலும் சேரலாம்.
  • 8
    கடந்த ஆண்டுகளில் 95% பயிற்சியாளர்கள் முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

இது தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளுடன் தொடர்புடையது

அரசு செய்திக் குறிப்புகளை தேர்தல் வாக்குறுதிகளுடன் ஒப்பிடும் NammaMap Manifesto AI-ல் கண்காணிக்கப்படுகிறது.

Archive navigation

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்