#Table Tennis
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Table Tennis குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
ஜப்பானில் நடைபெற்றுவரும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் ஆண்கள் ஒற்றையர் கிளாஸ் 1 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற வீரர் ஜெஹான் டொரப் மதன் அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் ஆண்கள் ஒற்றையர் கிளாஸ் 1 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள வீரர் ஜெஹான் டொரப் மதன் அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் மனமார்ந்த வாழ்த்துகள் தெரிவித்து, தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் ஜப்பானில் நடைபெற்ற பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் பெண்கள் கிளாஸ் 9 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை பேபி சஹானா ரவி அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து, உயரிய ஊக்கத்தொகை அறிவிப்பு
ஜப்பானில் நடைபெற்ற 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் பெண்கள் கிளாஸ் 9 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை பேபி சஹானா ரவி அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்து, ரூ. 30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை அறிவித்தார்.