#Tamil Culture
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Tamil Culture குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாவை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்புடன் நடைபெறுவதில் பெருமகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்துள்ளார்.
தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலை அடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்துச் சிறப்புச் செய்தல்
தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகளின் 150ஆவது பிறந்தநாளினை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டம், பல்லவபுரத்தில் உள்ள அவர் வாழ்ந்த இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு 15.07.2026 அன்று காலை 11.00 மணிக்கு மாலை அணிவித்து சிறப்புச் செய்யும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு நாள் முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி
தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி நடத்தப்பெறுகின்றன.