TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Textile Industry

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Textile Industry குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

18 நவ., 2026PR #1084

தமிழ்நாடு பஞ்சாலைக் கழகம் அருப்புக்கோட்டையில் புதிய தையல் அலகு மற்றும் கோயம்புத்தூரில் அலுவலக கட்டடம், கிட்டங்கி கட்ட உத்தரவு

தமிழ்நாடு பஞ்சாலைக் கழகம் அருப்புக்கோட்டை விசைத்தறிக்கூட வளாகத்தில் தொழில்நுட்ப ஜவுளி உற்பத்திக்காக ரூ.50 இலட்சம் மதிப்பில் புதிய தையல் அலகு மற்றும் கோயம்புத்தூர் குறிச்சியில் ரூ.2 கோடி மதிப்பில் அலுவலக கட்டடம், கிட்டங்கி கட்ட அதன் சொந்த நிதியிலிருந்து செயல்படுத்த ஆணையிடப்பட்டுள்ளது.

17 நவ., 2026PR #1073

ஜவுளித் தொழில் செறிவு மிகுந்த ஈரோடு பகுதியில் ஜவுளித் தொழிலின் மேம்பாட்டிற்காக ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்டு புதிய மண்டல துணை இயக்குநர் (துணிநூல்) அலுவலகம் அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது

ஈரோடு பகுதியில் ஜவுளித் தொழிலின் மேம்பாட்டிற்காக ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்டு புதிய மண்டல துணை இயக்குநர் (துணிநூல்) அலுவலகம் அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் தொழில் முனைவோர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் அரசு திட்டங்களின் கீழ் பயன்களை எளிதாகவும், விரைவாகவும் பெறுவார்கள்.

12 நவ., 2026PR #1036

திருப்பூர் பகுதியில் திருப்பூர் ஜவுளி தொழில்நுட்ப மையம் (Tiruppur Textile Technology Centre- TTTC) மற்றும் விளையாட்டு ஜவுளிகளுக்கான சிறப்பு மையம் நிறுவுவதற்கான தொழில் நுட்ப பொருளாதார சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொண்டு விரிவான திட்ட அறிக்கையினை தயாரிக்க ரூ.25 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, அரசு ஆணையிட்டுள்ளது.

திருப்பூர் பகுதியில் ஜவுளி தொழில்நுட்ப மையம் மற்றும் விளையாட்டு ஜவுளிகளுக்கான சிறப்பு மையம் நிறுவுவதற்கான சாத்தியக்கூறு ஆய்வு மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பிற்கு ரூ.25 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்ய அரசு ஆணையிட்டுள்ளது.

12 நவ., 2026PR #1035

கரூர் பகுதியில் வீட்டு உபயோக ஜவுளிகளுக்கான சிறப்பு மையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு மேற்கொள்ள ரூ.25 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, அரசு ஆணையிட்டுள்ளது.

கரூர் பகுதியில் வீட்டு உபயோக ஜவுளிகளுக்கான சிறப்பு மையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய ரூ.25 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

11 நவ., 2026PR #1026

தமிழ்நாட்டில் துணிநூல் துறையின் கீழ் இயங்கிவரும் ஆறு கூட்டுறவு நூற்பாலைகளின் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் அரசு திட்டங்களுக்குத் தேவையான நூல்களின் தரத்தினை மேம்படுத்தவும், புதிய இயந்திரங்கள் மற்றும் இயந்திர உதிரி பாகங்கள், தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழக நிதியுதவியுடன் கொள்முதல் செய்ய அரசு ஆணையிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் துணிநூல் துறையின் கீழ் இயங்கிவரும் ஆறு கூட்டுறவு நூற்பாலைகளின் உற்பத்தித்திறன் மற்றும் தரத்தினை மேம்படுத்த, ரூபாய் 14.00 கோடி மதிப்பில் புதிய இயந்திரங்கள் மற்றும் உதிரி பாகங்கள் தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழக நிதியுதவியுடன் கொள்முதல் செய்ய அரசு ஆணையிட்டுள்ளது.

3 செப்., 2026PR #616

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் - அங்கீகரிக்கப்படாத ஜவுளி பதப்படுத்தும் அலகுகளுக்கான அறிவுறுத்தல்கள்

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB), போதுமான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் அனுமதி இல்லாமல் செயல்படும் அங்கீகரிக்கப்படாத ஜவுளி பதப்படுத்தும் அலகுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது, இது சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்டது.

14 ஜூலை, 2026PR #391

தமிழ்நாடு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் மத்திய ஜவுளித்துறை அமைச்சரிடம் 20 கோரிக்கை மனுக்களை அளித்தார்

தமிழ்நாடு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் திரு.விஜய் பாலாஜி, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு.கிரிராஜ் சிங் அவர்களை சந்தித்து, மாநிலத்தின் கைத்தறி மற்றும் ஜவுளித் துறை மேம்பாட்டிற்கான 20 விரிவான கோரிக்கைகளை சமர்ப்பித்தார். இக்கோரிக்கைகளை பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் உறுதி அளித்தார்.

14 மே, 2026

பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்ய வலியுறுத்தி மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களின் கடிதம்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள், பருத்தி மற்றும் நூல் விலை உயர்வால் நெருக்கடியைச் சந்திக்கும் மாநில ஜவுளித் தொழிலைப் பாதுகாக்கும் நோக்கில், பருத்திக்கான 11 சதவீத இறக்குமதி வரியை ரத்து செய்ய வலியுறுத்தி, மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு 14.05.2026 அன்று கடிதம் எழுதியுள்ளார்.