TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

துறை வாரியான அறிவிப்புகள்

மின்சாரத்துறை

மின் உற்பத்தி, டான்ஜெட்கோ (TANGEDCO) மின்சார தகவல்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் சூரியசக்தி திட்டங்கள்.

9 ஜூலை, 2026PR #365

உலகத் தரத்திலான நவீன தொழில்நுட்பத்தை தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நடைமுறைப்படுத்திட தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB Ltd) – ஐஐடி, சென்னை (IIT Madras) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி. டி. ஆர். நிர்மல் குமார் அவர்கள் முன்னிலையில் கையெழுத்தானது.

இன்று (09.07.2026) சென்னையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி. டி. ஆர். நிர்மல் குமார் அவர்கள் முன்னிலையில், தமிழ்நாட்டின் மின்கட்டமைப்பை தொழில்நுட்ப ரீதியாக வலுப்படுத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒருங்கிணைப்பை மேம்படுத்தி, மின் சேவைகளின் நம்பகத்தன்மை, செயல்திறன் மற்றும் தரத்தினை உயர்த்தும் நோக்கில், தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB Ltd) மற்றும் இந்திய தொழில்நுட்பக் கழகம், சென்னை (IIT Madras) ஆகியவற்றுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது.

2 ஜூலை, 2026PR #328

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டப்பள்ளியில் ரூ. 24.71 கோடி மதிப்பீட்டில் புதிய நவீன மாணவர் விடுதிக் கட்டடத்திற்கு மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர்.நிர்மல் குமார் அவர்கள் அடிக்கல் நாட்டினார்!

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் பெருங்குடி வளாகத்தில், ரூ. 24.71 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள புதிய நவீன மாணவர் விடுதிக் கட்டடத்திற்கு மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார்.

30 ஜூன், 2026PR #312

புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிலையங்கள், தாங்கள் உற்பத்தி செய்யும் நிகழ்நேர தரவுகளை (Real-Time) உடனுக்குடன் தமிழ்நாடு மின்வாரியத்துடன் பகிர்வது இனி கட்டாயம். தவறும்பட்சத்தில் மின்உற்பத்தி நிறுவனங்களின் மின் உற்பத்தியில் 10% மின் கணக்கீடு கழித்து கணக்கிடப்படும் - மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு.சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் தகவல்.

தமிழ்நாடு அரசு அனைத்து புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிலையங்களையும், மாநில மின் சுமை பகிர்மான மையத்துடன் (SLDC) நிகழ்நேர தரவுகளை SCADA மூலம் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பகிர வேண்டும் என கட்டாயப்படுத்துகிறது. தவறும்பட்சத்தில், தமிழ்நாடு மின்சார கட்டமைப்பு விதிமுறை 2026-இன் படி, மின் கணக்கீட்டில் குறைப்பு மற்றும் மின் அனுப்புகை செயல்முறைகளிலிருந்து விலக்கு போன்ற அபராதங்கள் விதிக்கப்படும்.

24 ஜூன், 2026PR #276

எரிசக்தித் துறை சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தெரிவு செய்யப்பட்ட 383 உதவிப் பொறியாளர்கள் மற்றும் 18 உதவி கணக்கு அலுவலர்கள் என மொத்தம் 401 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகள்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (24.6.2026) சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எரிசக்தித் துறை சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தெரிவு செய்யப்பட்ட 383 உதவிப் பொறியாளர்கள் (மின்னியல்) மற்றும் 18 உதவி கணக்கு அலுவலர்கள் என மொத்தம் 401 நபர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கிச் சிறப்பித்தார்கள்.

19 ஜூன், 2026PR #259

தமிழ்நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் வெளிப்படையான நிர்வாக செயல்திறன் மற்றும் விரைவான சேவை வழங்கலை உறுதி செய்து, திட்டங்களை விரைவுபடுத்தி மாநிலத்தின் பசுமை ஆற்றல் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்திடும் வகையில் 5 புதிய மண்டலங்கள் உருவாக்கம்

மாண்புமிகு முதலமைச்சரின் உத்தரவின்படி, தமிழ்நாடு அரசு புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் நிர்வாக செயல்திறன் மற்றும் சேவை வழங்கலை மேம்படுத்தி, பசுமை ஆற்றல் வளர்ச்சியை விரைவுபடுத்த 5 புதிய மண்டலங்களை உருவாக்கியுள்ளது.

16 ஜூன், 2026PR #236

தமிழ்நாட்டின் மின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த ரூ.15,032 கோடி மதிப்பீட்டில் 231 புதிய துணை மின் நிலையங்கள் அமைத்திடவும், மின் பழுதுகளைச் சரிசெய்திடத் தேவையான 15,058 மின் பணியாளர்களை முறைப்படி நியமிக்கவும், மின் தளவாடப் பொருட்களை உடனடியாக கொள்முதல் செய்து, மின் பணியாளர்களை ரோந்துப் பணியில் ஈடுபடுத்திடவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் நடைபெற்ற எரிசக்தித் துறை சார்ந்த ஆய்வுக் கூட்டத்தில் உத்தரவு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் நடைபெற்ற எரிசக்தித் துறை சார்ந்த ஆய்வுக் கூட்டத்தில், மின் கட்டமைப்பை வலுப்படுத்த புதிய துணை மின் நிலையங்கள் அமைத்தல், மின் பணியாளர்கள் நியமனம், மின் தளவாடங்கள் கொள்முதல் மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபடுத்துதல் குறித்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

10 ஜூன், 2026PR #208

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விரைந்து மின்தடை சீரமைக்க 10 கண்காணிப்பு குழுக்கள் மற்றும் 125 ரோந்து வாகனங்களை அமைச்சர் துவக்கி வைத்தார்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகிர்மான பழுது மற்றும் இதர காரணங்களால் எதிர்பாராமல் இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடங்கல்களை விரைந்து சீர்செய்யும் வகையில் 10 கண்காணிப்பு குழுக்கள் மற்றும் 125 சிறப்பு மின் தடைநீக்க ரோந்து வாகனங்களின் இயக்கத்தினை மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.

6 ஜூன், 2026PR #187

மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு.சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் தலைமையில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

அமைச்சர் திரு.சி.டி.ஆர். நிர்மல் குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட வளர்ச்சிப் பணிகள், கழிவுநீர் வெளியேற்று திட்டங்கள் மற்றும் மதுரை மாநகராட்சியில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள், ஹார்ட் டிஸ்க் திருட்டு குறித்து ஆய்வு செய்யப்பட்டதுடன், தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

29 மே, 2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க, மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் 45 அரசு உதவி வழக்கறிஞர்களுக்கும் (நிலை 2) மற்றும் அரசு சட்டக்கல்லூரிகளில் 5 பொருளாளர் பணியிடங்களுக்கும் என மொத்தம் 50 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்

மாண்புமிகு முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க, எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர், 45 அரசு உதவி வழக்கறிஞர்களுக்கும் (நிலை 2) மற்றும் அரசு சட்டக்கல்லூரி பொருளாளர் பணியிடங்களுக்கும் என மொத்தம் 50 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

27 மே, 2026

மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு.சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் இடிமின்னல் தாக்கி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் தலா ரூ.4 இலட்சம் நிவாரணத்தொகைக்கான காசோலை வழங்கினார்

மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு.சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள், இடிமின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் தலா ரூ.4 இலட்சம் காசோலைகளை வழங்கினார்.

25 மே, 2026

கடந்த ஆட்சியில் தனிநபர்/ ஒரு நிறுவனத்திற்கு மட்டும் மின் வாரிய முக்கிய பணிகள் - ஒப்பந்தாரர்கள் புகார். இனிவரும் காலங்களில் வெளிப்படையான நிர்வாகத்தின் அடிப்படையில் தகுதியுள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் பணிகள் வழங்கப்படும் மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் உறுதி.

இன்று (25.05.2026) சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு மின்வாரியத்துடன் தொடர்புடைய ஒப்பந்ததாரர்கள், மின் உபகரண விநியோகஸ்தர்கள், வழங்குநர்கள் மற்றும் கொள்முதல் செய்பவர்கள் உள்ளிட்ட சுமார் 1000 பேருடன் வெளிப்படையான நிர்வாகம் மற்றும் முறைகேடுகள் தடுப்பு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

24 மே, 2026

மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் புழல் மத்திய சிறையில் ஆய்வு மேற்கொண்டு, பதிவேடுகளை கணினிமயமாக்க மற்றும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள உத்தரவிட்டார்

மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் இன்று (24.05.2026) புழல் மத்திய சிறையில் ஆய்வு மேற்கொண்டு, சிறைச்சாலை பதிவேடுகளை முழுவதுமாக கணினிமயமாக்க உத்தரவிட்டதோடு, போதைப்பொருள் புழக்கத்தை ஒழிக்கவும், கைதிகளுக்கான in-house bazaar அமைக்கவும் அறிவுறுத்தினார்.