TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

மாவட்ட செய்திகள்

திருச்சிராப்பள்ளி மாவட்டம்

திருச்சிராப்பள்ளி மாவட்ட உள்கட்டமைப்பு, கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு செய்திக் குறிப்புகள்.

3 ஜூன், 2026PR #159

"பயறு வகைகளில் தன்னிறைவுக்கான இயக்கத்தில்" பயறுவகைகள் பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்க ஆர்வமுள்ள, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்/தொகுப்பு அளவிலான கூட்டமைப்புகள்/தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள்/தனிநபர்கள் அதிகபட்சமாக 25 இலட்சம் ரூபாய் வரை மானியம் பெற மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு ர.வினோத் அவர்கள் தகவல்

உளுந்து, பாசிப்பயறு, துவரை மற்றும் காராமணி ஆகிய பயறுவகைப் பயிர்களின் உற்பத்தியைப் பெருக்கி, பயறு வகைகள் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்திடும் நோக்கில் தமிழ்நாட்டில் வேளாண்மைத்துறையின் மூலம் மத்திய மற்றும் மாநில அரசின் பங்களிப்புடன் "பயறு வகைகளில் தன்னிறைவுக்கான இயக்கம்" 2025-26-ஆம் ஆண்டுமுதல் செயல்படுத்தப்படுகிறது. உற்பத்தியாகும் பயறுவகைகளை மதிப்புக்கூட்டிட ஏதுவாக இத்திட்டத்தில் பயறுவகைகள் பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்க 33 சதவீத மானியமாக அதிகபட்சமாக 25 இலட்சம் ரூபாய் வரை இந்த நிதியாண்டிலும் (2026–27) வழங்கப்பட உள்ளது.

29 மே, 2026

கல்குவாரிகளில் விதிமீறல்: 67 தற்காலிக நிறுத்தம், 469 வாகனங்கள் பறிமுதல், சட்டவிரோத சுரங்கம் கண்டறிந்து அரசு நடவடிக்கை

தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்குவாரிகளில் மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட ஆய்வில், விதிமீறல்களுடன் செயல்பட்டு வந்த 67 கல்குவாரிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், 469 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 78 இடங்களில் சட்டவிரோத கனிம சுரங்கம் கண்டறியப்பட்டுள்ளது.

29 மே, 2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க, மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் 45 அரசு உதவி வழக்கறிஞர்களுக்கும் (நிலை 2) மற்றும் அரசு சட்டக்கல்லூரிகளில் 5 பொருளாளர் பணியிடங்களுக்கும் என மொத்தம் 50 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்

மாண்புமிகு முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க, எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர், 45 அரசு உதவி வழக்கறிஞர்களுக்கும் (நிலை 2) மற்றும் அரசு சட்டக்கல்லூரி பொருளாளர் பணியிடங்களுக்கும் என மொத்தம் 50 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

26 மே, 2026

திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறை சிப்காட் தொழில் பூங்கா மற்றும் மெகா உணவு பூங்காவினை மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் செல்வி ச. கீர்த்தனா அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

தொழில்துறை உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், சமச்சீரான வட்டாரத் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் செல்வி ச. கீர்த்தனா அவர்கள் இன்று (26.05.2026) திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறையில் அமைந்துள்ள சிப்காட் (SIPCOT) தொழிற்பூங்கா மற்றும் மெகா உணவுப் பூங்காவில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

24 மே, 2026

திருக்கோயில் பிரசாத விற்பனை நிலையங்களில் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை அலுவலர்கள் தொடர்ச்சியாக ஆய்வு செய்திட வேண்டும்; ஆய்விற்கு பின், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. சீ.ரமேஷ் அவர்கள் உத்தரவு மற்றும் யானை அகிலாவுக்கு 24வது பிறந்தநாள் விழா.

மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. சீ.ரமேஷ் அவர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள முக்கிய திருக்கோயில்களில் ஆய்வு மேற்கொண்டு, பிரசாத விற்பனை நிலையங்கள், பக்தர்களுக்கான வசதிகள் மற்றும் கட்டுமானப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும், FSSAI விதிமுறைகளை கட்டாயமாக்க உத்தரவிட்டார். யானை அகிலாவின் 24வது பிறந்தநாள் விழாவிலும் பங்கேற்றார்.

23 மே, 2026

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. சீ.ரமேஷ் அவர்கள் ஆய்வு

மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. சீ.ரமேஷ் அவர்கள் இன்று (23.05.2026) திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு.பி.என்.ஸ்ரீதர் இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் திருக்கோயில் நிர்வாகம் மற்றும் அன்னதானத் திட்டத்தின் செயல்பாடுகள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.