TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

அதிகாரப்பூர்வ பக்கங்கள்

தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.

19 ஆக., 2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (19.8.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், விதி எண் 110-ன் கீழ், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளில் மக்கள் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள ஏதுவாக அரசு சார்பில் வாகனம், வாகனப் படி மற்றும் உதவியாளர் படி வழங்கும் வகையில் வெளியிட்ட அறிவிப்புகள்.

சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளில் மக்கள் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள ஏதுவாக அரசு சார்பில் வாகனம், வாகனப் படி (மாதம் ரூ.75,000/-) மற்றும் உதவியாளர் படி (மாதம் ரூ.25,000/-) வழங்கப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

18 ஆக., 2026PR #553

கும்பகோணம் திருக்கோயிலிலிருந்து களவாடப்பட்டு இங்கிலாந்திலிருந்து மீட்டு தமிழ்நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட பழமையான திருமங்கை ஆழ்வார் வெண்கலச் சிலை - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் பார்வையிட்டார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் 17.8.2026 அன்று தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் அமைந்துள்ள அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் திருக்கோயிலிலிருந்து களவாடப்பட்டு, இங்கிலாந்து நாட்டிலிருந்து மீட்டு தமிழ்நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட பழமையான திருமங்கை ஆழ்வார் வெண்கலச் சிலையைப் பார்வையிட்டார்.

13 ஆக., 2026PR #529

அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாட்களில் 1 இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேலான முதலீடுகள் ஈர்ப்பு

அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாட்களில், வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில், மாண்புமிகு முதலமைச்சர் முன்னிலையில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 67,452 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,06,998 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், 8 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, 5 திட்டப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டு, 20 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.