TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

அதிகாரப்பூர்வ பக்கங்கள்

Dr M Saikumar Ias

Dr M Saikumar Ias தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.

15 அக்., 2026PR #849

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி குறைக்கடத்தி (Semiconductor) மற்றும் மேம்பட்ட உற்பத்தி மையமாக உருவாக்கும் வகையிலும், தமிழ்நாட்டில் குறைக்கடத்தி முதலீடுகளை அதிகளவில் ஈர்க்கும் வகையிலும் தமிழ்நாடு குறைக்கடத்தி சூழலமைப்புத் திட்டத்தை வெளியிட்டார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (15.10.2026) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில், தமிழ்நாடு குறைக்கடத்தி (Semiconductor) சூழலமைப்புத் திட்டத்தை வெளியிட்டார். தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி குறைக்கடத்தி மற்றும் மேம்பட்ட மின்னணு உற்பத்தி மையமாக உருவாக்கவும், குறைக்கடத்தித் துறையில் புதிய முதலீடுகளை ஈர்க்கவும் முக்கிய முன்னெடுப்பாக இத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

23 செப்., 2026PR #721

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் "தடையற்ற மின்சாரம் -மின்கட்டமைப்பு -நுகர்வோர் சேவை" குறித்து தமிழ்நாடு மின்சார வாரியத் தலைமையகத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தமிழ்நாடு மின்சார வாரியத் தலைமையகம், மாநில மின்பளு பகிர்வு மையம், SCADA கட்டுப்பாட்டு மையம் மற்றும் மின்னகம் நுகர்வோர் சேவை மையம் ஆகியவற்றை விரிவாக ஆய்வு செய்து, மின் விநியோகம், கட்டமைப்பு மற்றும் நுகர்வோர் சேவைகளை மேம்படுத்துவதுடன், தடையற்ற மற்றும் தரமான மின்சாரம் வழங்கவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவிக்கவும் அறிவுறுத்தினார்.

22 செப்., 2026PR #715

கூவம் ஆறு மறுசீரமைப்புத் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரித்தல் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (22.9.2026) தலைமைச் செயலகத்தில், கூவம் ஆறு மறுசீரமைப்புத் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்வது குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு, 2026 - 2027 நிதிநிலை அறிக்கையில், சென்னை நதிகள் மறுசீரமைப்புத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து, கூவம் ஆறு மறுசீரமைப்புத் திட்டம் தொடர்பான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டது.

21 செப்., 2026PR #708

"வெற்றிப் பயணம்" திட்டத்தின் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் "வெற்றிப் பயணம்" திட்டத்தின் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். இத்திட்டம் அக்டோபர் 2, 2026 அன்று தொடங்கப்பட்டு, தமிழ்நாட்டில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத்தை விரிவுபடுத்தும்.

21 செப்., 2026PR #706

ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனம் சென்னையில் உலகளாவிய திறன் மையம் அமைத்து 800 உயர் ஊதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும்

ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனம், தமிழ்நாட்டில் தனது முதல் உலகளாவிய திறன் மையத்தை (GCC) சென்னையில் அமைப்பதற்காக தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது 800 தொழில்நுட்ப நிபுணர்களுக்கு உயர் ஊதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும். மாண்புமிகு முதலமைச்சர் திரு ச. ஜோசப் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.