Dr R Kumar
Dr R Kumar தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.
செயற்கை நுண்ணறிவு (AI) தரவு மையம் அமைக்க எல்காட் (ELCOT) மற்றும் ஐஐடிஎம் பிரவர்த்தக் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
மாண்புமிகு செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் ரா. குமார் அவர்கள் முன்னிலையில், தமிழ்நாடு அரசுக்கான செயற்கை நுண்ணறிவு (AI) தரவு மையத்தை அமைப்பதற்கான திட்டக் கண்காணிப்புப் பிரிவாக செயல்பட, எல்காட் (ELCOT) நிறுவனத்திற்கும் ஐஐடிஎம் பிரவர்த்தக் டெக்னாலஜிஸ் ஃபவுண்டேஷன் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மேற்கொள்ளப்பட்டது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு குறித்த "துளி" இலச்சினையைத் திறந்து வைத்து, மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (21.10.2026) நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், சென்னை, சேப்பாக்கம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு குறித்த "துளி" இலச்சினையைத் திறந்து வைத்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு மாதிரி இல்லத்தைப் பார்வையிட்டார். பின்னர், மெரினா கடற்கரையில், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் உள்ள பகுதிகளில் மழைநீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வைப் பொதுமக்களிடையே ஏற்படுத்திடும் வகையில் மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து, குறும்படத்தைப் பார்வையிட்டார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தினைப் பார்வையிட்டும் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (18.10.2026) பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகையில், வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மற்றும் உயர் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தினைப் பார்வையிட்டு, மழைநீர் அகற்றம், மரக்கிளைகள் அகற்றம், நிவாரண மையங்கள், சுரங்கப்பாதைகள், மீட்பு உபகரணங்கள் மற்றும் உணவு வழங்கல் குறித்து கேட்டறிந்து, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.