TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

அதிகாரப்பூர்வ பக்கங்கள்

Honble Chief Minister Of Tamil Nadu

Honble Chief Minister Of Tamil Nadu தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.

24 நவ., 2026PR #1117

தமிழ்நாட்டில் உருவாகிவரும் வறட்சி நிலை தொடர்பாக மாண்புமிகு வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் திரு. ர. வினோத் அவர்களின் பத்திரிகை செய்தி

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை குறைவால் ஏற்பட்ட வறட்சி நிலை, பாதிக்கப்பட்ட மாவட்டங்கள், எல் நினோ நிகழ்வு, வேளாண்மைத் துறை எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் விவசாயிகளுக்கான அறிவுரைகள் குறித்து மாண்புமிகு வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் திரு. ர. வினோத் அவர்களின் பத்திரிகை செய்தி.

16 நவ., 2026PR #1066

விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்ப பெற்று ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க, மே 2021 முதல் ஏப்ரல் 2026 வரை விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடியதால் அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்ப பெற்று ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

13 நவ., 2026PR #1058

பயிர்க் காப்பீட்டுத் திட்டம் - விவசாயிகளின் நலன் மற்றும் வாழ்வாதார பாதுகாப்பிற்கு தமிழ்நாடு அரசு முன்னுரிமை - மாண்புமிகு வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களின் அறிவுரைக்கிணங்க பயிர்க் காப்பீட்டுத் திட்டம் குறித்த மாநில அளவிலான விவசாயிகள் விழிப்புணர்வுக் கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக இன்று 13-11-2026 சென்னை வேளாண்மை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

விவசாயிகளின் நலன் மற்றும் வாழ்வாதார பாதுகாப்பிற்கு தமிழ்நாடு அரசு முன்னுரிமை அளிக்கும் வகையில், பயிர்க் காப்பீட்டுத் திட்டம் குறித்த மாநில அளவிலான விவசாயிகள் விழிப்புணர்வுக் கூட்டம் இன்று 13.11.2026 காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. குத்தகை விவசாயிகள் பதிவு செய்வதில் ஏற்பட்ட சிரமங்கள் மற்றும் FID, ஆதார் அடிப்படையிலான OTP ஒப்புதல் கட்டாய நிபந்தனைகளில் தளர்வுகள் குறித்தும், சம்பா / தாளடி / பிசானம் நெற்பயிர்க் காப்பீட்டுக்கான கடைசி நாள் 01.12.2026 வரை நீட்டிக்கப்பட்டது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

13 நவ., 2026PR #1054

தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு மாணாக்கர்/ பொதுமக்களுக்கான ஆறு "தமிழ்நாடு நாள் - சிறப்புப் போட்டிகள்"

தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சமூக ஊடகப் பிரிவின் சார்பில் மாணாக்கர் மற்றும் பொதுமக்களுக்கான ஆறு சிறப்புப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இப்போட்டிகள் தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மொழி மற்றும் அடையாளங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

11 நவ., 2026PR #1030

குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்

தமிழ்நாடு அரசு நவம்பர் 13, 2026 அன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 61.84 லட்சம் மாணவர்களுக்கு ரூ.9.27 கோடி செலவில் கேக்குகள் மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கி கொண்டாட உள்ளது.

2 நவ., 2026PR #970

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர் மற்றும் பணியாளர்களுக்கு 2025-2026ஆம் ஆண்டிற்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்குதல்

தமிழ்நாட்டில் உள்ள 16 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 2025-2026ஆம் ஆண்டிற்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள். இதன் மூலம் சுமார் 5190 தொழிலாளர்கள் பயன்பெறுவர்.