பயிர்க் காப்பீட்டுத் திட்டம் - விவசாயிகளின் நலன் மற்றும் வாழ்வாதார பாதுகாப்பிற்கு தமிழ்நாடு அரசு முன்னுரிமை - மாண்புமிகு வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களின் அறிவுரைக்கிணங்க பயிர்க் காப்பீட்டுத் திட்டம் குறித்த மாநில அளவிலான விவசாயிகள் விழிப்புணர்வுக் கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக இன்று 13-11-2026 சென்னை வேளாண்மை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
விவசாயிகளின் நலன் மற்றும் வாழ்வாதார பாதுகாப்பிற்கு தமிழ்நாடு அரசு முன்னுரிமை அளிக்கும் வகையில், பயிர்க் காப்பீட்டுத் திட்டம் குறித்த மாநில அளவிலான விவசாயிகள் விழிப்புணர்வுக் கூட்டம் இன்று 13.11.2026 காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. குத்தகை விவசாயிகள் பதிவு செய்வதில் ஏற்பட்ட சிரமங்கள் மற்றும் FID, ஆதார் அடிப்படையிலான OTP ஒப்புதல் கட்டாய நிபந்தனைகளில் தளர்வுகள் குறித்தும், சம்பா / தாளடி / பிசானம் நெற்பயிர்க் காப்பீட்டுக்கான கடைசி நாள் 01.12.2026 வரை நீட்டிக்கப்பட்டது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
விரிவான சுருக்கம்
விவசாயிகளின் நலன் மற்றும் வாழ்வாதார பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் தமிழ்நாடு அரசு, பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் அதிக சாகுபடி பரப்பளவையும் விவசாயிகளையும் கொண்டுவர தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. எனினும், ஒன்றிய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் தேசிய பயிர்க் காப்பீட்டு இணையதள மாற்றங்களால், குறிப்பாக FID மற்றும் நில உரிமையாளர்களின் ஆதார் அடிப்படையிலான OTP ஒப்புதல் கட்டாயமாக்கப்பட்டதால், குத்தகை விவசாயிகள் பதிவு செய்வதில் சிரமங்கள் ஏற்பட்டன. இந்நிலையில், மாண்புமிகு வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களின் அறிவுரையின்படி, பயிர்க் காப்பீட்டுத் திட்ட நடைமுறைகள் குறித்த மாநில அளவிலான அனைத்து மாவட்ட விவசாயிகள் விழிப்புணர்வு கூட்டம் இன்று 13.11.2026 காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் தொடர் முயற்சியால், சம்பா / தாளடி / பிசானம் நெற்பயிர்க் காப்பீட்டுக்கான கடைசி நாள் 01.12.2026 வரை நீட்டிக்கப்பட்டதுடன், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, ஒன்றிய அரசை வேளாண்மைத் துறை உயரலுவலர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தியதன் அடிப்படையில், 2026-2027ஆம் ஆண்டிற்கு மட்டும் FID மற்றும் ஆதார் அடிப்படையிலான OTP ஒப்புதல் பெறுதல் ஆகிய கட்டாய நிபந்தனைகளிலிருந்து தளர்வுகள் பெறப்பட்டுள்ளன. இக்கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், பயிர் காப்பீடு தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடத்தும் இவ்வரசுக்கு நன்றி தெரிவித்ததுடன் திட்ட நடைமுறைகளிலுள்ள சிக்கல்களைக் களைந்து, விவசாயிகளுக்கு முழுமையாகப் பயனளிக்கும் வகையில் திட்டத்தை வடிவமைத்துச் செயல்படுத்திடவும் கேட்டுக்கொண்டனர். விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களிடமும், மாண்புமிகு வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் ஒன்றிய அரசின் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களிடமும் ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளனர். எனவே, மாநில மற்றும் ஒன்றிய அரசுகளின் கொள்கை முடிவுகள் தொடர்பான விவசாயிகளின் கோரிக்கைகள் உரிய பரிசீலனைக்கு உடனுக்குடன் எடுத்துக்கொள்ளப்பட்டு, அவற்றின் மீது தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வேளாண்மை-உழவர்நலத்துறையால் உறுதியளிக்கப்பட்டது.
முக்கிய அறிவிப்புகள்
- 1பயிர்க் காப்பீட்டுத் திட்டம் குறித்த மாநில அளவிலான விவசாயிகள் விழிப்புணர்வுக் கூட்டம் இன்று 13.11.2026 காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது.
- 2சம்பா / தாளடி / பிசானம் நெற்பயிர்க் காப்பீட்டுக்கான கடைசி நாள் 01.12.2026 வரை நீட்டிக்கப்பட்டது.
- 32026-2027ஆம் ஆண்டிற்கு மட்டும் FID மற்றும் ஆதார் அடிப்படையிலான OTP ஒப்புதல் பெறுதல் ஆகிய கட்டாய நிபந்தனைகளிலிருந்து தளர்வுகள் பெறப்பட்டுள்ளன.
- 4மாநில மற்றும் ஒன்றிய அரசுகளின் கொள்கை முடிவுகள் தொடர்பான விவசாயிகளின் கோரிக்கைகள் உரிய பரிசீலனைக்கு உடனுக்குடன் எடுத்துக்கொள்ளப்பட்டு, அவற்றின் மீது தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வேளாண்மை-உழவர்நலத்துறையால் உறுதியளிக்கப்பட்டது.