TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

ஆளுகை; நிர்வாகம்; விசாரணை

தமிழ்நாடு மின்சார வாரியம்

தமிழ்நாடு மின்சார வாரியம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வில் பசுமை எரிசக்தி கழகத்தின் ஒதுக்கீடு மற்றும் ஒப்புதல்களில் வெளிப்படைத்தன்மை இல்லாதது தெரியவந்தது. இதன் காரணமாக திரு. வி. காசி மற்றும் திரு. பி. சந்திரசேகரன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஓய்வு பெற்ற இயக்குநர் திரு. எஸ். மங்களநாதனின் ஓய்வூதிய பலன்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

விரிவான சுருக்கம்

மாண்புமிகு எரிசக்தி வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் பல்வேறு ஆய்வு கூட்டங்கள் நடத்தி வந்தார்கள். இந்த ஆய்வின் போது தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்தின் சமீபத்திய ஒதுக்கீடு மற்றும் ஒப்புதல் வழங்கியதில் வெளிப்படை தன்மை இல்லாமல், அவசர கதியில் ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்தது. மேற்கண்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் முறையான விசாரணை நடப்பதற்கும், நிர்வாக ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கும் முறையற்ற நிர்வாக தலையீடு மற்றும் இதர குற்றச்சாட்டுகள் காரணமாக திரு. வி. காசி தலைமை நிதிக்கட்டுப்பாட்டு அலுவலர், (வருவாய்) மற்றும் திரு. பி. சந்திரசேகரன், தலைமை பொறியாளர் (மரபுசாரா எரிசக்தி) ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், மேற்கூறிய குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய ஓய்வு பெற்ற இயக்குநர் (தொழில்நுட்பம்) பசுமை எரிசக்தி கழகம் திரு. எஸ். மங்களநாதன் அவர்களின் ஓய்வூதிய பலன்கள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது துறைரீதியான முறையான விசாரணை நடைபெற்று மின்வாரிய விதிமுறைகளின்படி மேல்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    திரு. வி. காசி, தலைமை நிதிக்கட்டுப்பாட்டு அலுவலர் (வருவாய்) தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
  • 2
    திரு. பி. சந்திரசேகரன், தலைமை பொறியாளர் (மரபுசாரா எரிசக்தி) தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
  • 3
    ஓய்வு பெற்ற இயக்குநர் (தொழில்நுட்பம்) திரு. எஸ். மங்களநாதனின் ஓய்வூதிய பலன்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
  • 4
    சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது துறைரீதியான முறையான விசாரணை நடைபெற்று வருகிறது.

இது தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளுடன் தொடர்புடையது

அரசு செய்திக் குறிப்புகளை தேர்தல் வாக்குறுதிகளுடன் ஒப்பிடும் NammaMap Manifesto AI-ல் கண்காணிக்கப்படுகிறது.

Archive navigation

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்