TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு

உலக நிலைத்தன்மை தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு உயிரிப்பல்வகைமை வாரியத்தின் சார்பில் இன்று "அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்கள் அர்த்தமுள்ள பாதுகாப்பு உத்தி மற்றும் செயல்திட்டத்தை நோக்கி" என்ற பயிலரங்கத்தினை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாடு உயிரிப்பல்வகைமை வாரிய தலைவருமான திரு.R.V. ரஞ்சித்குமார், அவர்கள் தொடங்கி வைத்தார்

உலக நிலைத்தன்மை தினத்தை முன்னிட்டு, 'அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்கள்-அர்த்தமுள்ள பாதுகாப்பு உத்தி மற்றும் செயல்திட்டத்தை நோக்கி' என்ற கருப்பொருளில் இரண்டு நாட்கள் நடைபெறும் பயிலரங்கத்தை மாண்புமிகு வனத்துறை அமைச்சரும், தமிழ்நாடு உயிரிப்பல்வகைமை வாரிய தலைவருமான திரு.R.V.ரஞ்சித்குமார் அவர்கள் சென்னையில் தொடங்கி வைத்து, உயிரிப்பல்வகைமை மேலாண்மை மற்றும் பாதுகாப்பு முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

விரிவான சுருக்கம்

உலக நிலைத்தன்மை தினத்தை முன்னிட்டு இன்று (28.10.2026 ) சென்னை கிண்டியில், தமிழ்நாடு உயிரிப்பல்வகைமை வாரியத்தின் சார்பில் "அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்கள்-அர்த்தமுள்ள பாதுகாப்பு உத்தி மற்றும் செயல்திட்டத்தை நோக்கி" என்ற கருப்பொருளில் இரண்டு நாட்கள் நடைபெறும் பயிலரங்கத்தை மாண்புமிகு வனத்துறை அமைச்சரும், தமிழ்நாடு உயிரிப்பல்வகைமை வாரிய தலைவருமான திரு.R.V.ரஞ்சித்குமார் அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, உயிரிப்பல்வகைமை மேலாண்மைக் குழு குறித்த குறுங்கையேட்டினை வெளியிட்டு, தனது தலைமையுரையில்உயிரிப்பல்வகைமை மேலாண்மை குழுக்களின் முக்கியத்துவத்தைப் பற்றியும், உயிரிப்பல்வகைமையின் பாதுகாப்பு மற்றும் அழிந்துவரும் உயிரினங்களின் பாதுகாப்பு குறித்தும் எடுத்துரைத்து இதுதொடர்பாக அரசின் உறுதியான நிலைப்பாட்டை வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சியில், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தமிழ்நாடு உயிரிப்பல்வகைமை வாரிய உறுப்பினர் செயலாளர் செல்வி மித்தா பானர்ஜி, இ.வ.ப., முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (வனத்துறை தலைவர்), திரு.A.உதயன், இ.வ.ப, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வனஉயிரின காப்பாளர் திரு.ராகேஷ் குமார் டோக்ரா, இ.வ.ப., கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை திட்ட இயக்குநர், காலநிலை மாற்றத்திற்கான உயிரிப்பல்வகைமை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டம், திரு.S. ராமசுப்ரமணியன், இ.வ.ப., வனத்துறை உயர் அலுவலர்கள், வனத்துறை களப்பணியாளர்கள், உயிரிப்பல்வகைமை மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் இந்திய தாவரவியல் மதிப்பீட்டியல் ஆய்வகம் (தெற்கு மண்டலம்) (BSI), இந்திய விலங்கியல் மதிப்பீட்டியல் ஆய்வகம் (தெற்கு மண்டலம்) (ZSI), மத்திய கடல்மீன்வள ஆராய்ச்சி நிலையம் (CMFRI), சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிறுவனம் (SDMRI), பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கம் (BNHS), ஜவஹர்லால் நேரு வெப்பமண்டல தாவரவியல் பூங்கா மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (கேரளா) (JNTBGRI) போன்ற ஆராய்ச்சி நிறுவனங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், நிபுணர்கள், அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    'அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்கள்-அர்த்தமுள்ள பாதுகாப்பு உத்தி மற்றும் செயல்திட்டத்தை நோக்கி' என்ற பயிலரங்கத்தினை தொடங்கி வைத்தல்
  • 2
    உயிரிப்பல்வகைமை மேலாண்மைக் குழு குறித்த குறுங்கையேட்டினை வெளியிடுதல்
  • 3
    உயிரிப்பல்வகைமை மேலாண்மை குழுக்களின் முக்கியத்துவத்தைப் பற்றியும் எடுத்துரைத்தல்
  • 4
    உயிரிப்பல்வகைமையின் பாதுகாப்பு மற்றும் அழிந்துவரும் உயிரினங்களின் பாதுகாப்பு குறித்தும் எடுத்துரைத்தல்
  • 5
    இதுதொடர்பாக அரசின் உறுதியான நிலைப்பாட்டை வலியுறுத்துதல்

Archive navigation

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்