TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

மக்கள் குறைதீர்

சென்னையிலுள்ள 19 மண்டலங்களில் வருகின்ற 11.07.2026 அன்று பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம்

ஜுலை 2026 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம், சென்னையின் 19 மண்டலங்களில் 11.07.2026 அன்று முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.

விரிவான சுருக்கம்

பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் பிரதி மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஜுலை 2026 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் 11.07.2026 அன்று முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது. குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும். பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சேவைகள் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்களில் பெறப்படும் கடவுச்சொல் வழியாக (OTP) மேற்கொள்ளப்படும் என்பதால் குடும்ப அட்டைதாரர்கள் பதிவு செய்யப்பட்ட கைபேசியுடன் மண்டல அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும். சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படும்.
  • 2
    ஜுலை 2026 மாதத்திற்கான பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டலங்களில் 11.07.2026 அன்று நடைபெறவுள்ளது.
  • 3
    குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு/மாற்றம் செய்தல் போன்ற சேவைகள்.
  • 4
    நேரில் வர இயலாத மூத்த குடிமக்களுக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும்.
  • 5
    பொது விநியோகக் கடைகள் மற்றும் தனியார் சந்தைகளில் உள்ள குறைகள் குறித்த புகார்களைத் தெரிவிக்கலாம்.
  • 6
    சேவைகள் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்களுக்கு வரும் கடவுச்சொல் (OTP) மூலம் மேற்கொள்ளப்படும்.

இது தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளுடன் தொடர்புடையது

அரசு செய்திக் குறிப்புகளை தேர்தல் வாக்குறுதிகளுடன் ஒப்பிடும் NammaMap Manifesto AI-ல் கண்காணிக்கப்படுகிறது.

Archive navigation

Newer
மாண்புமிகு மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மரு.கோ.க. அருண்ராஜ் அவர்கள் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சுகாதார சேவைகளை பொதுமக்கள் எளிதாக பெறுவதற்கான "நலம்AI" என்ற உரையாடலுடன் கூடிய செயலியை அறிமுகப்படுத்தி, மேம்படுத்தப்பட்ட அதிதீவிர சிகிச்சைப் பிரிவு, அலைபேசி சார்ந்த மருத்துவப் பயனாளர் சேவைகள் மற்றும் தொழில்துறை நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியில் வழங்கப்பட்ட நவீன மருத்துவ உபகரணங்களைப் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார்.
Older
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்