தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் 13 முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய ஆணை, 3 நபர்களுக்கு குடும்ப ஓய்வூதிய ஆணை மற்றும் ஓய்வூதிய நிலுவைத் தொகை ரூ.14.13 இலட்சத்திற்கான காசோலைகளை மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ்அர்ஜுனா அவர்கள் வழங்கினார்.
மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள் இன்று (30.07.2026) தலைமைச் செயலகத்தில், பொருளாதாரத்தில் நலிந்த நிலையிலுள்ள 13 முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய ஆணைகளையும், 3 நபர்களுக்கு குடும்ப ஓய்வூதிய ஆணைகளையும், ஓய்வூதிய நிலுவைத் தொகையினையும், 6 பயிற்றுநர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.
விரிவான சுருக்கம்
மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள் இன்று (30.07.2026) தலைமைச் செயலகத்தில், பொருளாதாரத்தில் நலிந்த நிலையிலுள்ள 13 முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய ஆணைகளையும், 3 நபர்களுக்கு குடும்ப ஓய்வூதிய ஆணைகளையும், ஓய்வூதிய நிலுவைத் தொகையினையும், 6 பயிற்றுநர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், பொருளாதாரத்தில் நலிந்த நிலையிலுள்ள 13 முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய ஆணைகளும், ஓய்வூதிய நிலுவைத் தொகையாக ரூ.9.36 இலட்சத்திற்கான காசோலைகளும், 3 நபர்களுக்கு குடும்ப ஓய்வூதிய ஆணைகளும், ஓய்வூதிய நிலுவைத் தொகையாக ரூ.4.77 இலட்சத்திற்கான காசோலைகளும், 4 பெண் பயிற்றுநர்கள், 2 ஆண் பயிற்றுநர்கள் என 6 பயிற்றுநர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள் வழங்கினார். விளையாட்டுத் துறைக்கு அவர்கள் ஆற்றிய சிறப்பான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையிலும், ஓய்விற்குப் பின் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்வதற்காகவும், 58 வயதை எட்டிய பொருளாதாரத்தில் நலிந்த நிலையிலுள்ள முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு மாதந்தோறும் ரூ.6,000/- ஓய்வூதியமாகவும் வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 82 நலிந்த நிலையில் உள்ள முன்னாள் விளையாட்டு வீரர்களும் மற்றும் 13 குடும்ப ஓய்வூதியதாரர்களும் ஓய்வூதியம் பெற்று பயனடைந்து வருகின்றனர்.
முக்கிய அறிவிப்புகள்
- 1பொருளாதாரத்தில் நலிந்த நிலையிலுள்ள 13 முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய ஆணைகள் வழங்கப்பட்டன.
- 23 நபர்களுக்கு குடும்ப ஓய்வூதிய ஆணைகள் வழங்கப்பட்டன.
- 3ஓய்வூதிய நிலுவைத் தொகையாக ரூ.14.13 இலட்சத்திற்கான காசோலைகள் வழங்கப்பட்டன (விளையாட்டு வீரர்களுக்கு ரூ.9.36 இலட்சம் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.4.77 இலட்சம்).
- 46 பயிற்றுநர்களுக்கு (4 பெண், 2 ஆண்) பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
- 558 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பொருளாதாரத்தில் நலிந்த முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு மாதந்தோறும் ரூ.6,000/- ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
- 6தற்போது 82 முன்னாள் விளையாட்டு வீரர்களும் மற்றும் 13 குடும்ப ஓய்வூதியதாரர்களும் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர்.