TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

பொது நலன்

ஆகஸ்ட் 4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்குச் சென்று பொது விநியோகத்திட்ட பொருட்கள் விநியோகம்

வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இல்லம் சென்று பொது விநியோகத் திட்டப் பொருட்களை விநியோகிக்கும் திட்டத்தின் கீழ், 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் இல்லங்களுக்குச் சென்று பொது விநியோகத் திட்டப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்தின் 4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் சென்னையில் உள்ள 19 மண்டலங்களில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டுவரும் 1346 நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்கள் அத்தியாவசியப் பொருட்களை இல்லம் சென்று விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

மாவட்டங்கள்சென்னை
முக்கிய நபர்கள்Thiru. Sa. Babu

விரிவான சுருக்கம்

வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இல்லம் சென்று பொது விநியோகத் திட்டப் பொருட்களை விநியோகிக்கும் திட்டத்தின் கீழ், 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் இல்லங்களுக்குச் சென்று பொது விநியோகத் திட்டப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்தின் 4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் சென்னையில் ஆவடி, அம்பத்தூர், அண்ணாநகர், சிதம்பரனார், கொளத்தூர், பெரம்பூர், ஆர்.கே.நகர், இராயபுரம், திருவொற்றியூர், வில்லிவாக்கம், ஆயிரம்விளக்கு, சேப்பாக்கம், மயிலாப்பூர், சைதாப்பேட்டை, தி.நகர், சோழிங்கநல்லூர், பரங்கிமலை, தாம்பரம் மற்றும் மதுரவாயல் ஆகிய 19 மண்டலங்களில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டுவரும் 1346 நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்கள் அத்தியாவசியப் பொருட்களை இல்லம் சென்று விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் இத்திட்டத்தைத் தவறாமல் பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    ஆகஸ்ட் 4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்குச் சென்று பொது விநியோகத்திட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்படும்.
  • 2
    சென்னையில் உள்ள 19 மண்டலங்களில் செயல்படும் 1346 நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்கள் அத்தியாவசியப் பொருட்களை இல்லம் சென்று விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
  • 3
    இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இத்திட்டத்தைத் தவறாமல் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Archive navigation

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்