TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Essential Commodities

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Essential Commodities குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

3 செப்., 2026PR #609

வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த கிலோ ரூ.35/-க்கு வெங்காயம் விற்பனை தொடக்கம் -மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.ப.வெங்கடரமணன் மற்றும் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.வ.காந்திராஜன் ஆகியோர் விற்பனையை தொடங்கி வைத்தார்கள்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மூலம் பொதுமக்களுக்கு தரமான வெங்காயம் குறைந்த விலையில் தடையின்றிக் கிடைக்கும் வகையில் சந்தை குறுக்கீட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெளிச்சந்தையில் அத்தியாவசியப் பொருளான வெங்காயத்தின் விலை உயர்ந்து வருவதைக் கட்டுப்படுத்தவும், ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக, தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை இணையம் (NAFED) மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (NCCF) ஆகியவற்றின் மூலம், முதற்கட்டமாக 1,000 மெட்ரிக் டன் வெங்காயம் மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கிலிருந்து தமிழ்நாடு அரசால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 03.09.2026 முதல் குடும்ப அட்டை ஒன்றுக்கு ஒரு கிலோ வீதம், கிலோ ரூ.35/- என்ற மானிய விலையில் தமிழ்நாடு முழுவதும் வெங்காயம் விற்பனை செய்யப்படும்.

13 ஆக., 2026PR #531

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சென்னையில் நியாய விலைக் கடையில் ஆய்வு

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப.வெங்கடரமணன் அவர்கள், சென்னை, கண்ணம்மாப்பேட்டையில் உள்ள நியாய விலைக் கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தை ஆய்வு செய்து, தரமான சேவை வழங்கவும், பொதுமக்கள் குறைகளைத் தீர்க்கவும் அறிவுறுத்தினார்.

2 ஆக., 2026PR #483

ஆகஸ்ட் 4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்குச் சென்று பொது விநியோகத்திட்ட பொருட்கள் விநியோகம்

வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இல்லம் சென்று பொது விநியோகத் திட்டப் பொருட்களை விநியோகிக்கும் திட்டத்தின் கீழ், 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் இல்லங்களுக்குச் சென்று பொது விநியோகத் திட்டப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்தின் 4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் சென்னையில் உள்ள 19 மண்டலங்களில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டுவரும் 1346 நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்கள் அத்தியாவசியப் பொருட்களை இல்லம் சென்று விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

15 ஜூலை, 2026PR #409

செய்தி வெளியீடு எண்: 409 - சென்னை வடக்கு மண்டலத்திற்குட்பட்ட 608 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப.வெங்கடரமணன் அவர்கள் வழங்கினார்.

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப.வெங்கடரமணன், சென்னை வடக்கு மண்டலத்திற்குட்பட்ட 608 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார். மேலும், அத்தியாவசியப் பொருட்களின் வெளிப்படைத்தன்மை மற்றும் நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடைவதை வலியுறுத்தினார்.

6 ஜூலை, 2026PR #342

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு ப.வெங்கடரமணன் அவர்கள் தலைமையில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் விலைக் கண்காணிப்பு பிரிவு ஆய்வுக் கூட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு ப.வெங்கடரமணன் தலைமையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க விலைக் கண்காணிப்பு பிரிவு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

2 ஜூன், 2026PR #154

உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையில் ஆய்வு

அமைச்சர் ப.வெங்கடரமணன் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையில் ஆய்வு மேற்கொண்டு, பொது விநியோகத் திட்டம் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கலைத் தடுப்பது குறித்து ஆலோசனை வழங்கினார்.

1 ஜூன், 2026

தாயுமானவர் திட்டத்தில் ஜுன் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் முதியோர் மாற்று திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருள்கள் விநியோகம்

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், ஜூன் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் சென்னையில் உள்ள 18 மண்டலங்களில் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லங்களுக்கே பொது விநியோகத்திட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.