TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

ஆய்வு

மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் அரசு மைய அச்சகத்தில் ஆய்வு

மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் இன்று (13.08.2026) சென்னை, வள்ளலார் நகரில் அமைந்துள்ள அரசு மைய அச்சகத்தில் ஆய்வு மேற்கொண்டார். பல்வேறு அச்சு இயந்திரங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, சட்டமன்றக் கூட்டத்தொடருக்கான அச்சுப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

விரிவான சுருக்கம்

மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் இன்று (13.08.2026) சென்னை, வள்ளலார் நகரில் அமைந்துள்ள அரசு மைய அச்சகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள CTP Plate Making Machine, Digital Printing Machine, CPC Four Colour Sheet Fed Offset Machine மற்றும் Cutting Machine உள்ளிட்ட பல்வேறு அச்சு இயந்திரங்களின் செயல்பாடுகளை அமைச்சர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தற்போது நடைபெற்று வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரை முன்னிட்டு தயாரிக்கப்படும் கொள்கை விளக்கக் குறிப்புகள், செயல்முறைத் திட்டம், மக்கள் சாசனம் மற்றும் மாண்புமிகு அமைச்சர்களின் துறை சார்ந்த அறிவிப்புகள் உள்ளிட்ட அச்சுப் பணிகளை உரிய காலக்கெடுவிற்குள் விரைந்து மேற்கொண்டு, எவ்விதத் தாமதமுமின்றி அச்சிட்டு வழங்கிடுமாறு அலுவலர்களுக்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் திரு. வே. இராஜாராமன், இ.ஆ.ப., எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையர் திருமதி ஆர். லில்லி, இ.ஆ.ப., மற்றும் துறையின் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    சட்டமன்றக் கூட்டத்தொடருக்கான கொள்கை விளக்கக் குறிப்புகள், செயல்முறைத் திட்டம், மக்கள் சாசனம் மற்றும் துறை சார்ந்த அறிவிப்புகள் உள்ளிட்ட அச்சுப் பணிகளை உரிய காலக்கெடுவிற்குள் விரைந்து முடித்து, தாமதமின்றி வழங்கிட வேண்டும்.

Archive navigation

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்