கலை பண்பாட்டுத்துறை சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட இளம் கலைஞர்களுக்கான மாநில கலைப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
கலை பண்பாட்டுத்துறை சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட மாநில அளவிலான கலைப்போட்டிகளில் வெற்றி பெற்ற இளம் கலைஞர்களுக்கு மாண்புமிகு அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் 09.09.2026 அன்று பரிசுகள் வழங்கி பாராட்டினார். இப்போட்டிகள் 08.09.2026 அன்று நடைபெற்றன.
விரிவான சுருக்கம்
தமிழ்நாட்டில் இளம் கலைஞர்களின் கலைத்திறமைகளை வெளிக்கொணரவும் அவர்களை ஊக்கப்படுத்தவும் கலை பண்பாட்டுத்துறை சார்பில் மாவட்ட, மாநில கலைப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. குரலிசை, பரதநாட்டியம், கருவியிசை, ஓவியம் மற்றும் கிராமியக்கலை என 5 பிரிவுகளில் 17 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளம் கலைஞர்கள் பங்கு பெறும் வகையில் இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. சென்னையில் மாநில அளவிலான போட்டிகள் 08.09.2026 அன்று இசைக்கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட்டன. இப்போட்டியில் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட போட்டிகளில் முதலிடம் பெற்றவர்கள் கலந்து கொண்டனர். மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா 09.09.2026 அன்று சென்னை அருங்காட்சியகம் கலையரங்கில் நடைபெற்றது. மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் பரிசுகள் வழங்கி விழா பேருரையாற்றினார்கள். உருபாணர் குழுவின் தொல்கருவியிசை, அனுஷம் குழுவினர் புவி காப்போம் நாட்டிய நிகழ்ச்சி, கிராமியக்கலைஞர்களின் தென்னிந்திய கிராமியக்கலைக்கூடல் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பரிசளிப்பு விழாவின் தொடக்கமாக கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் திருமதி மகேஸ்வரி ரவிக்குமார், இ.ஆ.ப., அவர்கள் வரவேற்புரையாற்றினார். அருங்காட்சியகங்கள் துறை இயக்குநர் திரு.தே.பாஸ்கர பாண்டியன், இ.ஆ.ப., அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். கலை பண்பாட்டுத்துறை இணை இயக்குநர் திருமதி ஜெ. கார்குழலி நன்றியுரை நல்கினார். இவ்விழாவில், டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் திருமதி பூமாலினி, தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி முதல்வர் கும்பகோணம் திரு.ஆ.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். 15 இளம் கலைஞர்களுக்கு மொத்தம் ரூ.3.00 இலட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. முதல் பரிசு ரூ.30000/-, இரண்டாம் பரிசு ரூ.20000/-, மூன்றாம் பரிசு ரூ.10000/- ஆகும். குரலிசை போட்டியில் பிரீத்தி சேதுராமன் (சென்னை), ச.வினோதா (காஞ்சிபுரம்), சி.மகன்யாஸ்ரீ (கிருஷ்ணகிரி) ஆகியோர் வெற்றி பெற்றனர். கருவியிசை போட்டியில் பி.வெங்கடேசன் (நாமக்கல்), சா.முகுந்தன் (மயிலாடுதுறை), ம.முருகன் (சென்னை) ஆகியோர் வெற்றி பெற்றனர். பரதநாட்டியப்போட்டியில் மு.இதிகாசினி (திருச்சிராப்பள்ளி), ம.சுகி பிரார்த்தனா (திருவள்ளூர்), ரா.மகேஸ்வரன் (சிவகங்கை) ஆகியோர் வெற்றி பெற்றனர். ஓவியப்போட்டியில் மா.ஸ்ரீநிலவன் (தஞ்சாவூர்), மா.கிஷோர் (இராணிபேட்டை), பொ.சுகுமார் (காஞ்சிபுரம்) ஆகியோர் வெற்றி பெற்றனர். கிராமியக் கலைப்போட்டியில் கு.பார்த்தீபன் (தருமபுரி), பி.பிரசன்னா (திருவள்ளூர்), க.அழகேஸ்வரன் (விருதுநகர்) ஆகியோர் வெற்றி பெற்றனர். இத்தகவல் கலை பண்பாட்டுத்துறையின் இயக்குநர் திருமதி மகேஸ்வரி ரவிக்குமார், இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய அறிவிப்புகள்
- 1மாநில அளவிலான கலைப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாண்புமிகு அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் பரிசுகள் வழங்கினார்.
- 215 இளம் கலைஞர்களுக்கு மொத்தம் ரூ. 3.00 இலட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
- 3குரலிசை, பரதநாட்டியம், கருவியிசை, ஓவியம் மற்றும் கிராமியக்கலை ஆகிய ஐந்து பிரிவுகளில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
- 4பரிசு வழங்கும் விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.