TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

சுற்றுச்சூழல், நகர்ப்புற வளர்ச்சி, உள்கட்டமைப்பு

கூவம் ஆறு மறுசீரமைப்புத் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரித்தல் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (22.9.2026) தலைமைச் செயலகத்தில், கூவம் ஆறு மறுசீரமைப்புத் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்வது குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு, 2026 - 2027 நிதிநிலை அறிக்கையில், சென்னை நதிகள் மறுசீரமைப்புத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து, கூவம் ஆறு மறுசீரமைப்புத் திட்டம் தொடர்பான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டது.

விரிவான சுருக்கம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கூவம் ஆற்றை அதன் இயற்கையான நிலைக்கு மீட்டெடுக்கவும், நிலையான சுற்றுச்சூழல் சீரமைப்பை உறுதிசெய்யவும், விரிவான திட்ட அறிக்கையைத் (DPR) தயாரிக்கும் பணிகளின் முன்னேற்றம் மற்றும் இத்திட்டத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள பல்வேறு வசதிகள், அதன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும், பன்னாட்டு தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் தரநிலைகளை உறுதி செய்யும் வகையில் இதற்கான உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகள் கோருவதற்கான பணிகள் குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொண்டார். இதன் தொடக்க நடவடிக்கையாக, கூவம் ஆற்றின் மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான கருத்துருவாக்கம் (Concept Plan) மற்றும் செயல் விளக்கத் திட்டம் மேற்கொள்ள, முதற்கட்டமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட 3 கி.மீ நீளமுள்ள பகுதிகளில், நடைபாதை மற்றும் மிதிவண்டிப் பாதைகள், நதிக்கரை நடைபாதைகள், பார்வையிடும் தளங்கள், பசுமைப் பகுதிகள், சமூகப் பயன்பாட்டு வசதிகள், இயற்கை சார்ந்த சுற்றுச்சூழல் மேம்பாட்டு நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கு ஆய்வு செய்யப்பட்டது. சென்னை மாநகரின் நதிச்சூழலை மேம்படுத்தி, பொதுமக்களுக்கு சிறந்த பொதுவெளிகளையும், வசதிகளையும் உருவாக்கும் நோக்கில், கூவம் ஆறு மறுசீரமைப்பு பல்வேறு கட்டங்களாக ஒருங்கிணைந்த மற்றும் நிலையான அணுகுமுறையுடன் முன்னெடுத்துச்செல்ல மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    கூவம் ஆறு மறுசீரமைப்புத் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரித்தல் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
  • 2
    தமிழ்நாடு அரசு, 2026 - 2027 நிதிநிலை அறிக்கையில், சென்னை நதிகள் மறுசீரமைப்புத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து, கூவம் ஆறு மறுசீரமைப்புத் திட்டம் தொடர்பான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டது.
  • 3
    கூவம் ஆற்றை அதன் இயற்கையான நிலைக்கு மீட்டெடுக்கவும், நிலையான சுற்றுச்சூழல் சீரமைப்பை உறுதிசெய்யவும், விரிவான திட்ட அறிக்கையைத் (DPR) தயாரிக்கும் பணிகளின் முன்னேற்றம் மற்றும் இத்திட்டத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள பல்வேறு வசதிகள், அதன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும், பன்னாட்டு தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் தரநிலைகளை உறுதி செய்யும் வகையில் இதற்கான உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகள் கோருவதற்கான பணிகள் குறித்தும் மாண்புமிகு முதலமைச்சர் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.
  • 4
    கூவம் ஆற்றின் மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான கருத்துருவாக்கம் (Concept Plan) மற்றும் செயல் விளக்கத் திட்டம் மேற்கொள்ளப்படும்.
  • 5
    முதற்கட்டமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட 3 கி.மீ நீளமுள்ள பகுதிகளில், நடைபாதை மற்றும் மிதிவண்டிப் பாதைகள், நதிக்கரை நடைபாதைகள், பார்வையிடும் தளங்கள், பசுமைப் பகுதிகள், சமூகப் பயன்பாட்டு வசதிகள், இயற்கை சார்ந்த சுற்றுச்சூழல் மேம்பாட்டு நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகள் ஆய்வு செய்யப்படும்.
  • 6
    சென்னை மாநகரின் நதிச்சூழலை மேம்படுத்தி, பொதுமக்களுக்கு சிறந்த பொதுவெளிகளையும், வசதிகளையும் உருவாக்கும் நோக்கில், கூவம் ஆறு மறுசீரமைப்பு பல்வேறு கட்டங்களாக ஒருங்கிணைந்த மற்றும் நிலையான அணுகுமுறையுடன் முன்னெடுத்துச்செல்ல மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

Archive navigation

Newer
ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிர் கிரிக்கெட் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணிக்கும், தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை கமலினி அவர்களுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் வாழ்த்துத் தெரிவித்து வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு
Older
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு தெற்கு உள்மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம்.

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்