17வது சட்டமன்றப் பேரவையின் 2026-27 ஆம் ஆண்டுக்கான அரசு உறுதிமொழிக் குழுவின் முதல் கூட்டத்தை பேரவைத் தலைவர் திரு. ஜே.சி.டி. பிரபாகர் தொடங்கி வைத்தார்
மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் திரு. ஜே.சி.டி. பிரபாகர் அவர்கள், 17வது சட்டமன்றப் பேரவையின் 2026-27 ஆம் ஆண்டுக்கான அரசு உறுதிமொழிக் குழுவின் முதல் கூட்டத்தை, அக்குழுவின் தலைவர் திரு. ரா.விஜய் சரவணன் தலைமையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டம் சட்டமன்ற உறுப்பினர் குடியிருப்பு வளாகத்தில் தொடங்கி வைத்தார்.
விரிவான சுருக்கம்
மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் திரு. ஜே.சி.டி. பிரபாகர் அவர்கள் இன்று (23.09.2026) ஓமந்தூரார் அரசினர் தோட்டம் சட்டமன்ற உறுப்பினர் குடியிருப்பு வளாகத்தில் உள்ள குழுக்கள் கூடும் அறையில், 17வது சட்டமன்றப் பேரவையின் 2026-27 ஆம் ஆண்டுக்கான அரசு உறுதிமொழிக் குழுவின் தலைவர் திரு. ரா.விஜய் சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற அரசு உறுதிமொழிக் குழுவின் முதல் கூட்டத்தை தொடங்கி வைத்து, சிறப்புரையாற்றினார். சட்டமன்றப் பேரவையில் மாண்புமிகு அமைச்சர்களால் அளிக்கப்படும் உறுதிமொழிகள் உரிய காலவரம்பிற்குள் செயல்படுத்தப்படுகின்றனவா என்பதைத் தொடர்ந்து கண்காணித்து, அவற்றில் நிறைவேற்றப்படாத உறுதிமொழிகளின் மீது பரிந்துரை செய்து பேரவைக்கு அறிக்கைகள் அளிப்பது குறித்தும், தனது ஆய்வுப் பணிகளை நடுநிலையுடனும், சட்டமன்ற நடைமுறைகளுக்கு உட்பட்டும், ஆக்கப்பூர்வமான அணுகுமுறையுடனும் மேற்கொண்டு, சட்டமன்றத்தின் கண்காணிப்பு மற்றும் பொறுப்புணர்வை மேலும் வலுப்படுத்தும் வகையிலும், சட்டமன்றத்திற்கும், அரசு நிர்வாகத்திற்கும் இடையே ஒரு பாலமாகவும் குழு செயல்பட வேண்டும் என்றும், பொதுமக்களின் நலன் சார்ந்த திட்டங்கள், உட்கட்டமைப்பு வசதிகள், கல்வி, மருத்துவம் மற்றும் சமூக நலன் சார்ந்த உறுதிமொழிகளை விரைந்து செயல்பாட்டிற்குக் கொண்டு வருவதன் அவசியம் குறித்தும் மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வலியுறுத்தினார். இக்கூட்டத்தில், சட்டமன்றப் பேரவைச் செயலாளர் திருமதி இரா. சாந்தி, குழுவின் உறுப்பினர்கள் திரு. கா. அண்ணாதுரை, திரு. கா. கருணாநிதி, திரு. ஆ. குட்டி (எ) சுதாகர், திரு. E.C. கோவிந்தராசன், திரு. D. சண்முகன், டாக்டர் சதீஸ் கிறிஸ்டோபர், திரு. க. பாலமுருகன், திரு. கு. ரவி மனோகரன், திரு. K. ராம்குமார் மற்றும் சட்டமன்றப் பேரவைச் செயலக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய அறிவிப்புகள்
- 117வது சட்டமன்றப் பேரவையின் 2026-27 ஆம் ஆண்டுக்கான அரசு உறுதிமொழிக் குழுவின் முதல் கூட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
- 2அமைச்சர்களால் அளிக்கப்படும் உறுதிமொழிகள் உரிய காலவரம்பிற்குள் செயல்படுத்தப்படுகின்றனவா என்பதை கண்காணித்து, நிறைவேற்றப்படாத உறுதிமொழிகள் மீது பரிந்துரை செய்து பேரவைக்கு அறிக்கைகள் அளிப்பதன் முக்கியத்துவத்தை பேரவைத் தலைவர் வலியுறுத்தினார்.
- 3குழு நடுநிலையுடனும், ஆக்கப்பூர்வமான அணுகுமுறையுடனும் செயல்பட்டு, சட்டமன்றத்திற்கும், அரசு நிர்வாகத்திற்கும் இடையே பாலமாக இருக்க வேண்டும் என்று பேரவைத் தலைவர் வலியுறுத்தினார்.
- 4பொதுமக்களின் நலன் சார்ந்த திட்டங்கள், உட்கட்டமைப்பு வசதிகள், கல்வி, மருத்துவம் மற்றும் சமூக நலன் சார்ந்த உறுதிமொழிகளை விரைந்து செயல்பாட்டிற்குக் கொண்டு வருவதன் அவசியத்தை பேரவைத் தலைவர் எடுத்துரைத்தார்.