TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

ஆய்வுக் கூட்டம்

மாண்புமிகு அமைச்சர் திரு. ப. வெங்கடரமணன் தலைமையில், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் செயல்பாடு, செயல்திறன் மற்றும் சட்டமன்ற அறிவிப்புகளின் செயலாக்கம் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப. வெங்கடரமணன் தலைமையில், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் செயல்பாடு, செயல்திறன் மற்றும் சட்டமன்ற அறிவிப்புகளின் செயலாக்கம் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

விரிவான சுருக்கம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப. வெங்கடரமணன் அவர்கள் தலைமையில், 22.09.2026 அன்று சென்னை, கிண்டியில் உள்ள தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவன தலைமை அலுவலகத்தில், நிறுவனத்தின் செயல்பாடு மற்றும் செயல்திறன் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் செயல்பாடு, பராமரிப்பு, சேமிப்பு வசதிகளின் பயன்பாடு மற்றும் வருவாய் மற்றும் செலவின செயல்திறன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஆகஸ்ட் மாதம், மாண்புமிகு அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் செயலாக்கம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், நிறைவேற்றப்பட்ட பணிகள் மற்றும் நிலுவைப் பணிகளை விரைந்து செயல்படுத்துவது குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சட்டமன்ற அறிவிப்புகளை உரிய காலக்கெடுவிற்குள் செயல்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார். மேலும், நிறுவனத்தின் செயல்பாடுகளை மேம்படுத்துதல் மற்றும் கிடங்கு மேலாண்மையினை திறம்பட செயல்படுத்துதல் தொடர்பாகவும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அறிவுரை வழங்கினார். இக்கூட்டத்தில், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. அ. ஜான் லூயிஸ், இ.ஆ.ப., மற்றும் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் செயல்பாடு, செயல்திறன் மற்றும் சட்டமன்ற அறிவிப்புகளின் செயலாக்கம் குறித்து ஆய்வு.
  • 2
    ஆகஸ்ட் மாத சட்டமன்ற அறிவிப்புகளின் செயலாக்கம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், நிறைவேற்றப்பட்ட பணிகள் மற்றும் நிலுவைப் பணிகள் குறித்து விரிவான ஆய்வு.
  • 3
    சட்டமன்ற அறிவிப்புகளை உரிய காலக்கெடுவிற்குள் செயல்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்.
  • 4
    நிறுவனத்தின் செயல்பாடுகளை மேம்படுத்துதல் மற்றும் கிடங்கு மேலாண்மையினை திறம்பட செயல்படுத்துதல் தொடர்பாக அறிவுரை.

Archive navigation

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்