TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

விருது அறிவிப்பு

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறைக்கு Skoch விருது

தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, போட்டித் தேர்வுகளுக்கான தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி சேவைகளுக்காக SKOCH Silver விருதைப் பெற்றது.

விரிவான சுருக்கம்

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையானது, மாநிலம் முழுவதும் செயல்படும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் மூலம் வேலைநாடுநர்களின் விவரங்களை பதிவு செய்தல், புதுப்பித்தல், பொது மற்றும் தனியார் துறை வேலையளிப்போர்களுக்கு பரிந்துரை செய்தல், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களை நடத்துதல், இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்குத் தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்குதல், கண்காட்சிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்குகள் வாயிலாக தொழில்நெறி வழிகாட்டுதல் வழங்குதல், போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகளை நடத்துதல், மெய்நிகர் கற்றல் இணையதளம் வாயிலாக போட்டித் தேர்வுகளுக்கு மென்பாடக்குறிப்புகளை வழங்குதல், கல்வித் தொலைக்காட்சி வாயிலாக பயிற்சி மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புதல் போன்ற பணிகளை மேற்கொள்கிறது. SKOCH குழுமம் 2026 ஆம் ஆண்டிற்கான "INDIA'S HONEST INDEPENDENT HONOUR" என்ற தலைப்பில் நடத்திய அனைத்துத் துறைகளுக்கான போட்டியில் "Evidence of Excellence" என்ற பிரிவின் கீழ் "Career Guidance and Coaching for Competitive Examinations" என்ற தலைப்பில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை பங்கேற்றதில் SKOCH Silver விருதிற்காக தேர்வு செய்யப்பட்டது. இதன் தொடர்பில், 26.09.2026 அன்று புதுதில்லியில் நடைபெற்ற 109-ஆவது SKOCH விருது வழங்கும் விழாவில், தமிழ்நாடு அரசு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறைக்கு SKOCH குழுமத்தால் SKOCH Silver விருது வழங்கப்பட்டது. இவ்விருதினை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் டாக்டர் சி. பழனி, இ.ஆ.ப., அவர்கள் SKOCH குழுமத்தின் தலைவர் திரு. சமீர் கோச்சர் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார். இவ்விழாவில், கூடுதல் இயக்குநர் (வேலைவாய்ப்பு) திருமதி வே. மீனாட்சி மற்றும் இணை இயக்குநர் (தொழில்நெறி வழிகாட்டல்) திருமதி ஆ. அனிதா ஆகியோர் உடனிருந்தனர்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறைக்கு SKOCH Silver விருது வழங்கப்பட்டது.

Archive navigation

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்