TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

சுகாதார நிர்வாகம், ஆய்வுக்கூட்டம்

இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது

மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஜா. முகமது பர்வேஸ் அவர்கள் தலைமையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது.

விரிவான சுருக்கம்

இன்று (17.11.2026) சென்னை அயனாவரம் இ.எஸ்.ஐ. மருத்துவமனை கூட்ட அரங்கில், மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஜா. முகமது பர்வேஸ் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள் மற்றும் இ.எஸ்.ஐ. மருந்தகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களின் செயல்பாடுகள், நாலொன்றுக்கான வெளிநோயாளிகள் வருகை (OP), பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் மற்றும் குறைகள், மருந்துகளின் இருப்பு மற்றும் கிடைப்புத்தன்மை ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், மருத்துவச் சேவைகளின் தரத்தையும், செயல்திறனையும் மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. அனைத்து மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) பொருத்துதல், தேவைப்படும் இடங்களில் குளிர்சாதனப் பெட்டிகள் (Refrigerators) அமைத்தல் மற்றும் பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறையை முறையாகச் செயல்படுத்துதல் ஆகியவற்றின் அவசியம் குறித்தும் அறிவுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அரசுச் செயலாளர் திரு. கொ. வீர ராகவ ராவ், இ.ஆ.ப., தமிழ்நாடு அரசு தொழிலாளர் ஈட்டுறுதித் திட்ட இயக்குநர் மருத்துவர் அ. பிரகலாதன், இணை இயக்குநர் மருத்துவர் வி.எஸ். பத்மா, துணை இயக்குநர் மருத்துவர் எஸ். அம்பாள், தமிழ்நாட்டில் உள்ள 7 இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளின் மருத்துவக் கண்காணிப்பாளர்கள் மற்றும் 241 இ.எஸ்.ஐ. மருந்தகங்களின் பொறுப்பு மருத்துவ அலுவலர்கள் (In-charge Medical Officers) கலந்து கொண்டனர்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    மருத்துவச் சேவைகளின் தரத்தையும், செயல்திறனையும் மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
  • 2
    அனைத்து மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) பொருத்துதல், தேவைப்படும் இடங்களில் குளிர்சாதனப் பெட்டிகள் (Refrigerators) அமைத்தல் மற்றும் பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறையை முறையாகச் செயல்படுத்துதல் ஆகியவற்றின் அவசியம் குறித்து அறிவுறுத்தப்பட்டது.

Archive navigation

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்