மாண்புமிகு சமூக நீதித் துறை அமைச்சர் திரு.வன்னி அரசு சமூக நீதி அறக்கட்டளையை தொடங்கி வைத்தார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் நலன் மற்றும் வளர்ச்சிக்காக இலாப நோக்கற்ற பொது அறக்கட்டளையாக 'சமூக நீதி அறக்கட்டளை' மாண்புமிகு சமூக நீதித் துறை அமைச்சர் திரு.வன்னி அரசு அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைப்படி இது அறிவிக்கப்பட்டது.
விரிவான சுருக்கம்
இன்று (12.10.2026) சென்னை, ஆதிதிராவிடர் நல இயக்குநரகத்தில் மாண்புமிகு சமூக நீதித் துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்கள் சமூக நீதி அறக்கட்டளையை தொடங்கி வைத்தார். இவ்வறக்கட்டளை சென்னை-5 சேப்பாக்கம், ஆதிதிராவிடர் நல இயக்குநரகத்தில் செயல்படும். தமிழ்நாட்டின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகங்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்காக அரசு தொடர்ந்து பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது தொடங்கப்பட்டுள்ள அறக்கட்டளையானது பெருநிறுவனங்கள், கொடையாளர்கள், தனிநபர் நன்கொடையாளர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் ஆகியோர்களை கைகோர்க்க அரசு இம்முயற்சிகளில் வழிவகுக்கிறது. அரசுக்கும் அனைத்து பங்குதாரர்களுக்கும் இடையே தடையற்ற ஒருங்கிணைப்பை உறுதிசெய்து சமூக நீதி அறக்கட்டளை செயல்படும். இந்தியா மற்றும் அயல்நாடுகளில் உள்ள தனிநபர்கள், நிறுவனங்கள், அமைப்புகளிடமிருந்து நிதி பங்களிப்புகள், பெருநிறுவனங்களின் சமூகப் பங்களிப்பு நிதி (CSR funds), நிலம், கட்டிடங்கள் மற்றும் பிற சொத்துக்களை இவ்வறக்கட்டளை திரட்டும். சமூக நீதித் துறைச் செயலாளரைத் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலராகக் (Chairman-cum-Managing Trustee) கொண்டு இயங்கும். அறங்காவலர் குழு இவ்வறக்கட்டளையை நிர்வகிக்கும். ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் உறுப்பினர்-செயலராகவும், பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழக (தாட்கோ) மேலாண்மை இயக்குநர் ஆகியோர் உறுப்பினர்களாகவும் செயல்படுவர். இவ்விழாவில் மாண்புமிகு சமூக நீதித் துறை அமைச்சர் அவர்கள் இத்துறையின் மிகச்சிறந்த முன்னெடுப்பு என்றும், சமூக மேம்பாட்டிற்குத் துணை நிற்க விரும்பும் நிறுவனங்களும் தனிநபர்களும் இந்த அறக்கட்டளையின் மூலம் பங்களிக்க முன்வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து, மஹிந்திரா வேர்ல்ட் சிட்டி டெவலப்பர்ஸ் லிமிடெட் நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டம் குமிழி ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளியில் (EMRS) நான்கு புதிய வகுப்பறைகளைக் கட்டுவதற்கு நிதி ஆதரவு வழங்கியது மற்றும் கற்றவை பற்றவை அரசுசாரா தொண்டு நிறுவனமானது 10 மிதிவண்டிகளை இவ்வறக்கட்டளைக்கு வழங்கி அதனை மாண்புமிகு சமூக நீதித் துறை அமைச்சர் திரு.வன்னி அரசு அவர்கள் பழங்குடியின மாணாக்கருக்கு வழங்கினார். இதன்மூலம் பழங்குடியின மாணாக்கருக்கு கல்வி மேம்பாடு, உட்கட்டமைப்பு வலுப்பெறச் செய்யும் எனவும், பெருநிறுவனங்கள், சி.எஸ்.ஆர். அமைப்புகள், கொடையாளர்கள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் இந்த 'சமூக நீதி அறக்கட்டளையுடன்' இணைந்து பணியாற்ற சமூக நீதித் துறை இதன் மூலம் அழைப்பு விடுக்கிறது.
முக்கிய அறிவிப்புகள்
- 1மாண்புமிகு சமூக நீதித் துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்களால் சமூக நீதி அறக்கட்டளை தொடங்கி வைக்கப்பட்டது.
- 2ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் நலன் மற்றும் வளர்ச்சிக்காக இலாப நோக்கற்ற பொது அறக்கட்டளையாக செயல்படும்.
- 3இந்தியா மற்றும் அயல்நாடுகளில் உள்ள தனிநபர்கள், நிறுவனங்கள், அமைப்புகளிடமிருந்து நிதி பங்களிப்புகள், பெருநிறுவனங்களின் சமூகப் பங்களிப்பு நிதி (CSR funds), நிலம், கட்டிடங்கள் மற்றும் பிற சொத்துக்களை திரட்டும்.
- 4சமூக நீதித் துறைச் செயலாளரைத் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலராகக் கொண்டு அறங்காவலர் குழுவால் நிர்வகிக்கப்படும்.
- 5மஹிந்திரா வேர்ல்ட் சிட்டி டெவலப்பர்ஸ் லிமிடெட் நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டம் குமிழி ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளியில் (EMRS) நான்கு புதிய வகுப்பறைகளைக் கட்டுவதற்கு நிதி ஆதரவு வழங்கியது.
- 6கற்றவை பற்றவை அரசுசாரா தொண்டு நிறுவனமானது 10 மிதிவண்டிகளை பழங்குடியின மாணாக்கருக்கு வழங்கியது.
- 7சமூக நீதி அறக்கட்டளையுடன் இணைந்து பணியாற்ற தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.