ஆட்டோ ரிக்ஷா கட்டணம் மறு நிர்ணயம் வெளியீடு
ஆட்டோ ரிக்ஷா சங்கங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கூட்டமைப்புகளுடன் நடத்தப்பட்ட கலந்தாய்வுக் கூட்டத்தைத் தொடர்ந்து, ஒரு அலுவலர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஆட்டோ ரிக்ஷா கட்டணம் மறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விரிவான சுருக்கம்
மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள் தலைமையில் 09.07.2026 அன்று ஆட்டோ ரிக்ஷா சங்கங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கூட்டமைப்புகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஆட்டோ ரிக்ஷா கட்டணம் மறுநிர்ணயம் செய்ய ஒரு அலுவலர் குழு அமைக்கப்பட்டது. ஆட்டோ ரிக்ஷா உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர் சங்கங்கள், நுகர்வோர் அமைப்புகள் ஆகியோர்களின் கருத்துகள் மற்றும் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் குழு பரிந்துரைகள் வழங்கியது. அதனடிப்படையில் கீழ்கண்டவாறு ஆட்டோ ரிக்ஷா கட்டணம் மறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சக் கட்டணம் ₹50, குறைந்தபட்சப் பயணத் தூரம் 1.8 கி.மீ. 1.8 கி.மீ. தொலைவுக்குப் பிறகு ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் கட்டணம் ₹25. காத்திருப்புக் கட்டணம் நிமிடத்திற்கு ₹1. இரவு நேர கட்டணம் (இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரை) வழக்கமான கட்டணத்தின் 1.5 மடங்கு. மலைப்பாதைக் கட்டணம் வழக்கமான கட்டணத்தின் 1.2 மடங்கு. ஆட்டோ ரிக்ஷா உரிமையாளர்கள் / ஓட்டுநர்கள் 6 மாத காலத்திற்குள் தங்களின் கட்டணமானியை புதிய கட்டணத்திற்கு ஏற்றவாறு மறுசீரமைத்துக் கொள்ள வேண்டும். அதுவரை போக்குவரத்துத் துறை இணைய தளத்தில் உள்ள கட்டண அட்டையை பதிவிறக்கம் செய்து, பொதுமக்கள் பார்வைக்காக வாகனத்தில் வைத்திருக்க வேண்டும். ஆட்டோ ரிக்ஷாவில் பார்வைக்கு வைத்துள்ள கட்டண அட்டையில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து கட்டண அட்டையின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். மேலும், போக்குவரத்துத் துறையின் https://tnsta.gov.in/ என்ற இணையதளத்தில் கட்டண அட்டையை பார்வையிடலாம். பொதுமக்கள் அதிக கட்டணம் குறித்த புகார் தெரிவிக்க வேண்டிய கட்டணமில்லா தொலைப்பேசி எண்: 1800 425 5430.
முக்கிய அறிவிப்புகள்
- 1குறைந்தபட்ச ஆட்டோ ரிக்ஷா கட்டணம்: முதல் 1.8 கி.மீ.க்கு ₹50 (தமிழ்நாடு முழுவதும்).
- 21.8 கி.மீ. தொலைவுக்குப் பிறகு ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் கட்டணம்: ₹25.
- 3காத்திருப்புக் கட்டணம்: நிமிடத்திற்கு ₹1 (தமிழ்நாடு முழுவதும்).
- 4இரவு நேர கட்டணம் (இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரை): வழக்கமான கட்டணத்தின் 1.5 மடங்கு.
- 5மலைப்பாதைக் கட்டணம்: வழக்கமான கட்டணத்தின் 1.2 மடங்கு.
- 6ஆட்டோ ரிக்ஷா உரிமையாளர்கள் / ஓட்டுநர்கள் 6 மாத காலத்திற்குள் கட்டணமானியை புதிய கட்டணத்திற்கு ஏற்றவாறு மறுசீரமைக்க வேண்டும்.
- 7மறுசீரமைப்பு செய்யும் வரை, போக்குவரத்துத் துறை இணையதளத்தில் இருந்து கட்டண அட்டையை பதிவிறக்கம் செய்து, பொதுமக்கள் பார்வைக்காக வாகனத்தில் வைத்திருக்க வேண்டும்.
- 8கட்டண அட்டையின் உண்மைத்தன்மையை சரிபார்க்க QR குறியீடு.
- 9அதிக கட்டணம் குறித்த புகார்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 425 5430.