TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

சிறுபான்மையினர் நலன்; நிதி உதவி; விருதுகள் மற்றும் அங்கீகாரம்

சிறுபான்மையினருக்கு கடன் உதவி வழங்கி, அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் தென்மண்டல அளவில் சிறப்பாக செயல்பட்டமைக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TAMCO) 2025-2026 ஆம் ஆண்டில் தென்மண்டல அளவில் சிறுபான்மையினருக்கு கடன் உதவி வழங்கி, அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டமைக்காக முதல் பரிசு பெற்றது.

விரிவான சுருக்கம்

தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக்கழகத்தின் (NMDFC) முகவர்களாக செயல்பட்டு வரும் தென்மண்டல மாநிலங்களுக்கான மண்டல ஆய்வுக் கூட்டம் 09.10.2026 அன்று ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழ்நாட்டின் மாநில முகமையாக செயல்பட்டு வரும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்திற்கு (TAMCO) தென்மண்டல அளவில் 2025-2026 ஆம் ஆண்டில் சிறப்பாகச் செயல்பட்டமைக்கு முதல் பரிசு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக் கழகத்தின் தலைவர் (ம) மேலாண்மை இயக்குநர் அவர்களால் வழங்கப்பட்டது. TAMCO, தமிழ்நாட்டில் வசிக்கும் இஸ்லாமியர், கிறித்தவர், சீக்கியர், புத்தமதத்தவர், பார்சி மற்றும் ஜெயின் போன்ற சிறுபான்மையினருக்கு சுய வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கான செயல்பாடுகளுக்குக் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கி அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துகிறது. இந்த சாதனைக்காக மாண்புமிகு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அவர்களால் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TAMCO) 2025-2026 ஆம் ஆண்டில் தென்மண்டல அளவில் சிறப்பாக செயல்பட்டமைக்காக முதல் பரிசு பெற்றது.
  • 2
    தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக் கழகத்தின் தலைவர் (ம) மேலாண்மை இயக்குநர் அவர்களால் விருது வழங்கப்பட்டது.
  • 3
    இந்த சாதனைக்காக மாண்புமிகு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அவர்களால் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

Archive navigation

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்