மாண்புமிகு மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.த.சரத்குமார் அவர்கள் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சிமைய முதல்நிலைத் தேர்வுப் பயிற்சிக்கான தொடக்க நிகழ்வில் கலந்துரையாடல்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி இன்று (29.10.2026) பயிற்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில், மாண்புமிகு மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.த.சரத்குமார் அவர்கள் தலைமையில் 2027-ஆம் ஆண்டிற்கான ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணைய முதல்நிலைத் தேர்வுப் பயிற்சிக்கான தொடக்க நிகழ்வு நடைபெற்றது.
விரிவான சுருக்கம்
இந்நிகழ்வில், மாண்புமிகு அமைச்சர் அவர்கள் முதல்நிலைத் தேர்வுப் பயிற்சிக்கு அனுமதிக்கப்பட்ட ஆர்வலர்களுடன் கலந்துரையாடினார். அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் பயின்று, கடந்த ஆண்டு குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆர்வலர்களின் எண்ணிக்கையை விட இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான ஆர்வலர்கள் வெற்றி பெற வேண்டும் என மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெரிவித்தார். பயிற்சி மையத்தின் செயல்பாடுகள் ஆர்வலர்களுக்கு பயனுள்ளதாக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும், மேலும் ஷெனாய் நகரில் கட்டப்பட்டு வரும் பயிற்சி மையத்தில் வருங்காலத்தில் அதிகளவில் ஆர்வலர்கள் சேர்க்கப்படுவர் எனவும், அரசின் முழு ஒத்துழைப்பும் இப்பயிற்சி மையத்திற்கு வழங்கப்படும் எனவும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெரிவித்தார். தமிழ்நாட்டு மாணவர்கள் அதிக அளவில் குடிமைப்பணித் தேர்வில் வெற்றி பெற்று, இந்திய அளவில் உயர்ந்த ஆட்சிப் பொறுப்புகளை வகிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு அதற்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். சென்னையில் 225 பேருக்கு முழு நேரப் பயிற்சியும், 100 பேருக்கு பகுதி நேரப் பயிற்சியும், மதுரை மற்றும் கோயம்புத்தூரில் தலா 100 பேருக்கு முழு நேரப் பயிற்சியும் என மொத்தம் 525 பேருக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளன. இந்த கலந்துரையாடல் நிகழ்வின் போது மனிதவள மேலாண்மைத் துறையின் அரசு முதன்மைச் செயலாளரும் அண்ணா நிருவாகப் பணியாளர் கல்லூரி இயக்குநர்/பயிற்சித் துறைத் தலைவருமான திரு.சி.சமயமூர்த்தி, இ.ஆ.ப., கூடுதல் இயக்குநர் (போட்டித்தேர்வுகள்) திரு.ராகவேந்திரன், பயிற்சி மைய முதல்வர் முனைவர் தே.சங்கர சரவணன், பயிற்சி மைய நிருவாக அலுவலர்/மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி பி.எஸ்.விஜயலட்சுமி, பயிற்சித் துறைத் தலைவர் அலுவலக துணை ஆட்சியர் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
முக்கிய அறிவிப்புகள்
- 1அதிக எண்ணிக்கையிலான ஆர்வலர்கள் குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.
- 2பயிற்சி மையத்தின் செயல்பாடுகள் ஆர்வலர்களுக்கு பயனுள்ளதாக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
- 3ஷெனாய் நகரில் கட்டப்பட்டு வரும் பயிற்சி மையத்தில் வருங்காலத்தில் அதிகளவில் ஆர்வலர்கள் சேர்க்கப்படுவர்.
- 4அரசின் முழு ஒத்துழைப்பும் இப்பயிற்சி மையத்திற்கு வழங்கப்படும்.
- 5தமிழ்நாட்டு மாணவர்கள் அதிக அளவில் குடிமைப்பணித் தேர்வில் வெற்றி பெற்று, இந்திய அளவில் உயர்ந்த ஆட்சிப் பொறுப்புகளை வகிக்க வேண்டும்.
- 6சென்னையில் 225 பேருக்கு முழு நேரப் பயிற்சியும், 100 பேருக்கு பகுதி நேரப் பயிற்சியும், மதுரை மற்றும் கோயம்புத்தூரில் தலா 100 பேருக்கு முழு நேரப் பயிற்சியும் என மொத்தம் 525 பேருக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளன.