TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

பாசனம் மற்றும் நீர் மேலாண்மை

திருநெல்வேலி மணிமுத்தாறு அணையிலிருந்து பிசான பருவ சாகுபடிக்கு நீர் திறப்பு

தமிழ்நாடு அரசு திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அணையிலிருந்து பிசான பருவ சாகுபடிக்கு 151 நாட்களுக்கு நீர் திறக்க உத்தரவிட்டுள்ளது, இதன் மூலம் 2756.62 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

மாவட்டங்கள்திருநெல்வேலி
முக்கிய நபர்கள்Thiru. S. Joseph Vijay

விரிவான சுருக்கம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவிற்கிணங்க, திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு நீர்த்தேக்கத்திலிருந்து பெருங்கால் பாசனத்தில் உள்ள 2756.62 ஏக்கர் நேரடி மற்றும் மறைமுக பாசன நிலங்களுக்கு பிசான பருவ சாகுபடிக்கு நீர் திறக்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. 01.11.2026 முதல் 31.03.2027 முடிய 151 நாட்களுக்கு நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தைப் பொறுத்து 417.74 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விடப்படும். இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், ஜமீன் சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி, வைராவிகுளம், தெற்கு பாப்பான்குளம், கீழ்முகம் மற்றும் தெற்கு கல்லிடைக்குறிச்சி கிராமங்களில் உள்ள 2756.62 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    மணிமுத்தாறு நீர்த்தேக்கத்திலிருந்து பிசான பருவ சாகுபடிக்கு நீர் திறப்பு.
  • 2
    01.11.2026 முதல் 31.03.2027 வரை 151 நாட்களுக்கு நீர் திறக்கப்படும்.
  • 3
    417.74 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்கப்படும்.
  • 4
    அம்பாசமுத்திரம் வட்டம் கிராமங்களில் உள்ள 2756.62 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்.

Archive navigation

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்