TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

பொது போக்குவரத்து, நுகர்வோர் பாதுகாப்பு, பண்டிகை மேலாண்மை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் அதிகப்படியான கட்டணம் வசூலிப்பதை தடுப்பது, போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக செய்தி வெளியீடு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுப்பது மற்றும் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்துவது குறித்து 29.10.2026 அன்று ஒரு கூட்டம் நடைபெற்றது. ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பயணிகளை ஏற்ற வேண்டும், திருவசந்தம் உணவகம் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட வேண்டும், அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முடிவெடுக்கப்பட்டது.

விரிவான சுருக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுப்பது மற்றும் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்துவது குறித்து முதன்மை செயலாளர்/போக்குவரத்து ஆணையர் திருமதி சிஜி தாமஸ் வைத்யன், போக்குவரத்து துறை அரசு செயலாளர் திரு. இல.நிர்மல்ராஜ், மற்றும் சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் முனைவர் வீ.ப. ஜெயசீலன் ஆகியோர் தலைமையில் 29.10.2026 அன்று மாநில போக்குவரத்து ஆணையரகத்தில் ஒரு கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சிரமமின்றி செல்லவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகிலுள்ள திருவசந்தம் உணவகத்திற்கு முன்னர் நிறுத்தக்கூடாது என்றும், இணையவழி தளத்தில் இடம்பெற்றுள்ள திருவசந்தம் உணவகம் நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் ஒதுக்கப்பட்ட நிறுத்துமிடத்தில் மட்டுமே பயணிகளை ஏற்றிச்செல்ல வேண்டும் என்றும், திருவசந்தம் உணவகம் முன்பு நிறுத்தப்படும்பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது. பண்டிகைக் காலங்களில் அதிகக் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் சிறை பிடிக்கப்பட்டு, அனுமதிச்சான்று மீது தற்காலிக தடை / அனுமதி இரத்து போன்ற கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனை கண்காணிக்க தமிழகம் முழுவதுமுள்ள 12 சரகங்களில் சிறப்புப் பறக்கும் படை (Enforcement Team) குழு அமைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இக்கூட்டத்தில் காவல் துறை உயர் அதிகாரிகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலைய மாவட்ட வருவாய் அலுவலர், அரசு விரைவு போக்குவரத்துக் கழக பொது மேலாளர், ஆம்னி பேருந்து பதிவு நிறுவனங்கள் (Abhi Bus, Red Bus, Zing Bus, Flix Bus, Paytm) மற்றும் தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். புகார் தெரிவிக்க 1800 425 6151 என்ற கைப்பேசி எண்ணும், tc.tn@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியும் வழங்கப்பட்டது.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகிலுள்ள திருவசந்தம் உணவகத்திற்கு முன்னர் நிறுத்தக்கூடாது.
  • 2
    இணையவழி தளத்தில் இடம்பெற்றுள்ள திருவசந்தம் உணவகம் நீக்கம் செய்யப்பட வேண்டும்.
  • 3
    ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் ஒதுக்கப்பட்ட நிறுத்துமிடத்தில் மட்டுமே பயணிகளை ஏற்றிச்செல்ல வேண்டும்.
  • 4
    அதிகக் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் சிறை பிடிக்கப்பட்டு, அனுமதிச்சான்று மீது தற்காலிக தடை / அனுமதி இரத்து போன்ற கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
  • 5
    தமிழகம் முழுவதுமுள்ள 12 சரகங்களில் சிறப்புப் பறக்கும் படை (Enforcement Team) குழு அமைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
  • 6
    புகார் தெரிவிக்க கைப்பேசி எண் (1800 425 6151) மற்றும் மின்னஞ்சல் முகவரி (tc.tn@nic.in) வழங்கப்பட்டுள்ளது.

Archive navigation

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்

சுருக்கத்தை வாசிக்க
1 நவ., 2026

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான நீதி கிடைக்கவும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம், 2012-ன் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை மட்டும் விசாரிப்பதற்காக, 26 புதிய சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கவும், மற்றும் போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு உருவாக்கும் இலக்குடன், போதை மருந்துகள் மற்றும் மன மயக்கப் பொருட்கள் சட்டம், 1985-ன் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை மட்டும் விசாரிப்பதற்கென, 4 புதிய சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கவும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு அரசு உத்தரவு

சுருக்கத்தை வாசிக்க