TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

இரங்கல் மற்றும் நிதியுதவி

அரியலூர் மாவட்டம், தளவாய் காவல் நிலைய காவல் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த ஊர்க்காவல் படையைச் சேர்ந்த நபரின் குடும்பத்தினருக்கு இரங்கல் மற்றும் நிதியுதவி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு

அரியலூர் மாவட்டம், தளவாய் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஊர்க்காவல் படையைச் சேர்ந்த திரு.சி.வெங்கடேசன் என்பவர் காவல் பணியில் ஈடுபட்டிருந்தபோது தாக்கப்பட்டதில் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஐந்து இலட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார்.

விரிவான சுருக்கம்

அரியலூர் மாவட்டம், தளவாய் காவல் நிலையத்தைச் சேர்ந்த இரண்டாம்நிலைக் காவலர் திரு.ராஜகண்ணன் (வயது 32) மற்றும் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த திரு.சி.வெங்கடேசன் (வயது 48) ஆகியோர் கடந்த 29.10.2026 இரவு, காவல் பீட் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சிலுப்பனூர் லாரிஷெட் அருகே மது போதையில் சந்தேகத்திற்கிடமாக இருந்த மூவரை விசாரித்து எச்சரிக்கை செய்து அனுப்பிவைத்த பின்னர், மீண்டும் அவர்கள் ஈச்சங்காடு பிரதான சாலையில் சந்தேகத்திற்கிடமான நிலையில் இருந்ததால், அவர்களை விசாரிக்க முற்பட்டபோது, அவர்கள் தாக்கியதில் இரண்டாம்நிலைக் காவலரும், ஊர்காவல் படையைச் சேர்ந்த நபரும் காயமுற்று செந்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஊர்க்காவல்படையைச் சேர்ந்த திரு.சி.வெங்கடேசன் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு தமிழ்நாடு ஊர்காவல்படைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் திரு.சி.வெங்கடேசன் அவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ஐந்து இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    காவல் பணியில் ஈடுபட்டிருந்தபோது தாக்கப்பட்டதில் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த திரு.சி.வெங்கடேசன் உயிரிழப்பு.
  • 2
    திரு.சி.வெங்கடேசன் குடும்பத்தினருக்கு ஐந்து இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி.

Archive navigation

Newer
தமிழ்நாடு நாள் விழா
Older
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான நீதி கிடைக்கவும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம், 2012-ன் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை மட்டும் விசாரிப்பதற்காக, 26 புதிய சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கவும், மற்றும் போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு உருவாக்கும் இலக்குடன், போதை மருந்துகள் மற்றும் மன மயக்கப் பொருட்கள் சட்டம், 1985-ன் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை மட்டும் விசாரிப்பதற்கென, 4 புதிய சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கவும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு அரசு உத்தரவு

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்