#Ariyalur
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Ariyalur குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
குழந்தைகள் நலக்குழுவிற்கு உறுப்பினர்கள் நியமனம்
2015-ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின்படி அரியலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலக்குழுவிற்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அரியலூர் மாவட்டம், தளவாய் காவல் நிலைய காவல் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த ஊர்க்காவல் படையைச் சேர்ந்த நபரின் குடும்பத்தினருக்கு இரங்கல் மற்றும் நிதியுதவி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
அரியலூர் மாவட்டம், தளவாய் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஊர்க்காவல் படையைச் சேர்ந்த திரு.சி.வெங்கடேசன் என்பவர் காவல் பணியில் ஈடுபட்டிருந்தபோது தாக்கப்பட்டதில் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஐந்து இலட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா, தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கல், கனிமவள திட்டப்பணிகளை இயற்கை வளங்கள் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்
உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு, மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டிகே.பிரபு அரியலூர் மாவட்டத்தில் மாபெரும் மரக்கன்றுகள் நடும் விழாவினை தொடங்கி வைத்து, தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி, கனிமவள அறக்கட்டளை நிதி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.