முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு திருமண மற்றும் மாதாந்திர நிதியுதவியை அமைச்சர் திரு. த. சரத்குமார் வழங்கினார்
மாண்புமிகு மனிதவள மேலாண்மைத் துறை மற்றும் முன்னாள் படைவீரர் நலத்துறை அமைச்சர் திரு. த. சரத்குமார், முன்னாள் படைவீரர்களின் மகள்களுக்கான திருமண நிதியுதவி மற்றும் மாற்றுத்திறனாளி முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கான மாதாந்திர நிவாரண நிதியுதவியை, மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டபடி, உயர்த்தி வழங்கினார்.
விரிவான சுருக்கம்
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் 15.08.2026 அன்று சுதந்திர தின விழா உரையில், முன்னாள் படைவீரர்களின் இரண்டு மகள்களுக்கு வழங்கப்படும் திருமண மானிய நிதியுதவி ரூ.25,000/-லிருந்து ரூ.50,000/- ஆகவும், மாற்றுத்திறனாளி முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர நிவாரண நிதியுதவி ரூ.5,000/-லிருந்து ரூ.7,000/- ஆகவும் உயர்த்தப்படும் என்று அறிவித்தார்கள். மேலும், 2026-27ஆம் நிதி ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பொதுத்துறை மானியக் கோரிக்கையின் போது, முன்னாள் படைவீரர் நலத்துறை அமைச்சர் அவர்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் விதவைகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர நிதியுதவி தொகை ரூ.4,000/-லிருந்து ரூ.6,000/- ஆக உயர்த்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்கள். மேற்படி அறிவிப்புகளை நடைமுறைப்படுத்தும் வகையில், 03.11.2026 அன்று, சென்னை நந்தனத்தில் உள்ள தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கழக அலுவலகத்தில் வைத்து, மாண்புமிகு மனிதவள மேலாண்மைத் துறை மற்றும் முன்னாள் படைவீரர் நலத்துறை அமைச்சர் திரு. த. சரத்குமார் அவர்கள், முன்னாள் படைவீரர் மகள் ஒருவருக்கு திருமண மானிய நிதியுதவியாக ரூ.50,000/-, 5 மாற்றுத்திறனாளி முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கு ஒரு மாதத்திற்கு ரூ.7,000/- நிதியுதவி மற்றும் 5 முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கு ஒரு மாதத்திற்கு ரூ.6,000/-க்கான மாதாந்திர நிதியுதவி ஆகிய 11 பயனாளிகளுக்கு நேரடியாக வழங்கினார். இவ்விழாவில் பொது மற்றும் மறுவாழ்வுத் துறை அரசு செயலாளர் திருமதி எ.சுந்தரவல்லி, இ.ஆ.ப., முன்னாள் படைவீரர் நலத்துறை இயக்குநர் திருமதி மா.சௌ. சங்கீதா, இ.ஆ.ப., தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கழக பொது மேலாளர் திருமதி மு.மணிமேகலை இ.ஆ.ப., மற்றும் முன்னாள் படைவீரர் நலத்துறை உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முக்கிய அறிவிப்புகள்
- 1முன்னாள் படைவீரர்களின் மகள்களுக்கான திருமண நிதியுதவி ரூ.25,000/-லிருந்து ரூ.50,000/- ஆக உயர்த்தப்பட்டது.
- 2மாற்றுத்திறனாளி முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கான மாதாந்திர நிவாரண நிதியுதவி ரூ.5,000/-லிருந்து ரூ.7,000/- ஆக உயர்த்தப்பட்டது.
- 3முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் விதவைகளுக்கான மாதாந்திர நிதியுதவி ரூ.4,000/-லிருந்து ரூ.6,000/- ஆக உயர்த்தப்பட்டது.
- 4அமைச்சர் திரு. த. சரத்குமார் 03.11.2026 அன்று 11 பயனாளிகளுக்கு உயர்த்தப்பட்ட சலுகைகளை வழங்கினார்.