TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

ஆற்றல் கொள்கை மற்றும் உள்கட்டமைப்பு

2029-ஆம் ஆண்டிற்குள் 10 GWh மின்கல ஆற்றல் சேமிப்புத் திறனை உருவாக்க இலக்கு! தமிழ்நாடு மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு (BESS) கொள்கை - 2026 மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விண்ணப்ப வலைதளம் (Renewable Energy Application Portal) அறிமுகம்!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி, இன்று (03.11.2026) மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் தமிழ்நாடு மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு (BESS) கொள்கை - 2026 மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விண்ணப்ப வலைதளம் ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார். 2029-ஆம் ஆண்டிற்குள் 10 GWh மின்கல ஆற்றல் சேமிப்புத் திறனை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விரிவான சுருக்கம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி, இன்று (03.11.2026) சென்னை மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில், மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் வளர்ச்சியை விரைவுபடுத்தவும், முதலீட்டாளர்களுக்கு எளிமையான, விரைவான மற்றும் வெளிப்படையான சேவைகளை வழங்கவும் தமிழ்நாடு மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு (BESS) கொள்கை - 2026 மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விண்ணப்ப வலைதளம் ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார். இக்கொள்கையின் முக்கிய நோக்கம், அதிகரித்து வரும் சூரிய மற்றும் காற்றாலை மின்சார உற்பத்தியை முழுமையாகப் பயன்படுத்துவதற்கும், உச்சபட்ச மின்தேவை நேரங்களில் தடையற்ற மின்சாரம் வழங்குவதற்கும் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் முக்கிய பங்கு வகிப்பதாகும். பகல்நேர உபரி மின்சாரத்தைச் சேமித்து, அதிக மின்தேவை ஏற்படும் நேரங்களில் பயன்படுத்துவதன் மூலம் மின்கட்டமைப்பின் நிலைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்த முடியும். 2029-ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டில் 10 GWh மின்கல ஆற்றல் சேமிப்புத் திறனை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்கொள்கையின்கீழ், தனித்த மின்கல ஆற்றல் சேமிப்புத் திட்டங்கள், சூரிய மற்றும் காற்றாலை மின் திட்டங்களுடன் ஒருங்கினைந்த சேமிப்புத் திட்டங்கள், மின்பரிமாற்றம் மற்றும் விநியோகக் கட்டமைப்புகளுக்கு ஆதரவான திட்டங்கள் ஆகியவற்றுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. 1 மெகாவாட் மற்றும் அதற்கு மேற்பட்ட நிறுவுதிறன் கொண்ட புதிய சூரிய மின் திட்டங்களில், நிறுவப்பட்ட சூரிய மின்திறனில் குறைந்தபட்சம் 10 சதவீத BESS திறன், நான்கு மணி நேர மின்சார வெளியீட்டுத் திறனுடன் நிறுவுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில், தகுதியுடைய BESS திட்டங்கள் வணிகரீதியாகச் செயல்படத் தொடங்கும் நாளிலிருந்து பத்து ஆண்டுகளுக்கு மின்கடத்தல் மற்றும் மின்பரிமாற்றக் கட்டணங்களில் 100 சதவீத விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விண்ணப்ப வலைதளம் என்பது ஒற்றைச்சாளர இணையவழி அனுமதி முறையாகும், இது திட்டமுனைவோர் பதிவு செய்தல், விண்ணப்பம் மற்றும் ஆவணங்களைச் சமர்ப்பித்தல், கட்டணம் செலுத்துதல், தொழில்நுட்ப ஆய்வு, மின்சுமை ஓட்டப் பகுப்பாய்வு மற்றும் மின்கட்டமைப்பு இணைப்பு அனுமதி பெறுதல் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளையும் ஒரே தளத்தில் மேற்கொள்ள உதவுகிறது. இது முதலீட்டாளர்களுக்கு எளிமையான மற்றும் வெளிப்படையான சேவைகளை வழங்குகிறது.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    2029-ஆம் ஆண்டிற்குள் 10 GWh மின்கல ஆற்றல் சேமிப்புத் திறனை உருவாக்க இலக்கு நிர்ணயம்
  • 2
    தமிழ்நாடு மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு (BESS) கொள்கை - 2026 அறிமுகம்
  • 3
    புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விண்ணப்ப வலைதளம் (Renewable Energy Application Portal) அறிமுகம்
  • 4
    1 மெகாவாட் மற்றும் அதற்கு மேற்பட்ட நிறுவுதிறன் கொண்ட புதிய சூரிய மின் திட்டங்களில், நிறுவப்பட்ட சூரிய மின்திறனில் குறைந்தபட்சம் 10 சதவீத BESS திறன், நான்கு மணி நேர மின்சார வெளியீட்டுத் திறனுடன் நிறுவுவது கட்டாயம்
  • 5
    தகுதியுடைய BESS திட்டங்களுக்கு வணிகரீதியாகச் செயல்படத் தொடங்கும் நாளிலிருந்து பத்து ஆண்டுகளுக்கு மின்கடத்தல் மற்றும் மின்பரிமாற்றக் கட்டணங்களில் 100 சதவீத விலக்கு
  • 6
    புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விண்ணப்ப வலைதளம் ஒற்றைச்சாளர இணையவழி அனுமதி முறையாக செயல்படும்

Archive navigation

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்