மாண்புமிகு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. த.சரத்குமார் அவர்கள் மனிதவள மேலாண்மைத் துறை சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தலைமைச் செயலகத் துறைகளுக்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணி தேர்வில் தெரிவு செய்யப்பட்ட 41 நபர்களுக்கு துறை ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்.
மாண்புமிகு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. த.சரத்குமார் அவர்கள் மனிதவள மேலாண்மைத் துறை சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தலைமைச் செயலகத் துறைகளுக்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணி தேர்வில் தெரிவு செய்யப்பட்ட 41 நபர்களுக்கு துறை ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்.
விரிவான சுருக்கம்
மாண்புமிகு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. த.சரத்குமார் அவர்கள் மனிதவள மேலாண்மைத் துறை சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தலைமைச் செயலகத் துறைகளுக்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணி (தொகுதி -II) தேர்வில் தெரிவு செய்யப்பட்ட 41 நபர்களுக்கு துறை ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார். இதில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் பல்வேறு துறைகளுக்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (தொகுதி -IIA) தேர்வில் தலைமைச் செயலகத்தில் உதவியாளர் பணிக்காகத் தெரிவு செய்யப்பட்ட 14 நபர்களுக்கும், மேலும் தேர்வாணையம் நடத்தும் தொகுதி V-A தேர்வுகளின் மூலம் தலைமைச் செயலகத்தில் உதவிப் பிரிவு அலுவலர் பணிக்காகத் தெரிவு செய்யப்பட்ட 22 நபர்களுக்கும் மற்றும் உதவியாளர் பணிக்காகத் தெரிவு செய்யப்பட்ட 5 நபர்களுக்கும் துறை ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர் நிலை-II, உதவிப் பிரிவு அலுவலர், உதவியாளர் போன்ற பல்வேறு பதவிகளுக்கு சுமார் 1200 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு 28.09.2025 அன்று நடைபெற்றது. இத்தேர்வுக்கு மொத்தம் 5,53,634 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்த நிலையில், அவர்களில் 4,20,217 விண்ணப்பதாரர்கள் தேர்வில் கலந்து கொண்டனர். அவர்களில் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் உதவியாளர் பணிக்காக அறிவிக்கப்பட்ட பணியிடங்களுக்கு 14 நபர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மேலும், தமிழ்நாடு அமைச்சுப் பணி மற்றும் தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப் பணிகளில் பணியாற்றும் அலுவலர்கள், தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் உள்ள உதவிப் பிரிவு அலுவலர் (22) மற்றும் உதவியாளர் (5) பணியிடங்களுக்கு நியமனம் செய்யப்படுவதற்காக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 21.12.2025 அன்று நடத்தப்பட்ட தொகுதி V-A தேர்வுக்கு மொத்தம் 623 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களில் 406 பேர் தேர்வில் கலந்து கொண்டனர். தேர்வு முடிவுகளின் அடிப்படையில், 27 விண்ணப்பதாரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த நிகழ்வு இன்று (12.11.2026) அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் நடைபெற்றது. மனிதவள மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் திரு.சி. சமயமூர்த்தி, இ.ஆ.ப., அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி இயக்குநர் திரு. அஜய் யாதவ், இ.ஆ.ப. மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய அறிவிப்புகள்
- 1தலைமைச் செயலகத் துறைகளுக்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணி (தொகுதி -II) தேர்வில் தெரிவு செய்யப்பட்ட 41 நபர்களுக்கு துறை ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்பட்டன.
- 2ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (தொகுதி -IIA) தேர்வில் தலைமைச் செயலகத்தில் உதவியாளர் பணிக்காகத் தெரிவு செய்யப்பட்ட 14 நபர்களுக்கு துறை ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்பட்டன.
- 3தொகுதி V-A தேர்வுகளின் மூலம் தலைமைச் செயலகத்தில் உதவிப் பிரிவு அலுவலர் பணிக்காகத் தெரிவு செய்யப்பட்ட 22 நபர்களுக்கும் மற்றும் உதவியாளர் பணிக்காகத் தெரிவு செய்யப்பட்ட 5 நபர்களுக்கும் துறை ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்பட்டன.
- 428.09.2025 அன்று நடைபெற்ற முதல்நிலைத் தேர்வின் மூலம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் உதவியாளர் பணிக்காக 14 நபர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
- 521.12.2025 அன்று நடத்தப்பட்ட தொகுதி V-A தேர்வின் அடிப்படையில் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் உதவிப் பிரிவு அலுவலர் (22) மற்றும் உதவியாளர் (5) பணியிடங்களுக்கு 27 விண்ணப்பதாரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.