TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

பாசனம் மற்றும் நீர் மேலாண்மை

செய்தி வெளியீடு: அடவிநயினார்கோவில் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க, தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம், மேக்கரை கிராமத்தில் உள்ள அடவிநயினார்கோவில் நீர்த்தேக்கத்திலிருந்து 7643.15 ஏக்கர் நிலங்களுக்கு பாசனத்திற்காக 16.11.2026 முதல் 31.03.2027 வரை 136 நாட்களுக்கு நீர் திறக்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.

மாவட்டங்கள்தென்காசி
முக்கிய நபர்கள்Thiru. S. Joseph Vijay

விரிவான சுருக்கம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவிற்கிணங்க, தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம், மேக்கரை கிராமத்தில் உள்ள அடவிநயினார்கோவில் நீர்த்தேக்கத்தின் கீழ் நேரடி மற்றும் மறைமுக பாசனம் பெறும் 7643.15 ஏக்கர் நிலங்களுக்கு தேவையான நீரை தற்போது நீர்த்தேக்கத்தின் இருப்பில் உள்ள மற்றும் எதிர்ப்பார்க்கப்படும் நீர்வரத்துபோக மீதமுள்ள நீர் அணைக்கு கீழ் உள்ள நீர்வடியும் பரப்பிலிருந்து கிடைக்கப்பெறும் என எதிர்ப்பார்க்கப்பட்டு 16.11.2026 முதல் 31.03.2027 வரை 136 நாட்களுக்கு வினாடிக்கு 100 கன அடி அளவுக்கு மிகாமல் நீர் இருப்பு மற்றும் தேவையை பொறுத்து தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் அடவிநயினார்கோவில் நீர்த்தேக்கத்தின் கீழ் பாசனம் பெறும் வடகரை கீழ்பிடாகை, வடகரை மேல்பிடாகை, பண்பொழி, இலத்தூர், குத்துக்கல் வலசை, கொடிக்குறிச்சி, அச்சன்புதூர், நெடுவயல், நயினாரகரம், கிளாங்காடு, ஆயிக்குடி, சாம்பவர் வடகரை, சுரண்டை ஆகிய கிராமங்களில் உள்ள 7643.15 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    அடவிநயினார்கோவில் நீர்த்தேக்கத்திலிருந்து 7643.15 ஏக்கர் நிலங்களுக்கு பாசனத்திற்காக நீர் திறப்பு.
  • 2
    136 நாட்களுக்கு வினாடிக்கு 100 கன அடி அளவுக்கு மிகாமல் நீர் திறக்கப்படும்.
  • 3
    நீர் திறப்பு காலம் 16.11.2026 முதல் 31.03.2027 வரை.

Archive navigation

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்