TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Child Protection

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Child Protection குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

20 நவ., 2026PR #1104

இளைஞர் நீதி குழுமத்திற்கு சமூகப் பணி உறுப்பினர்கள் நியமனம்

2015-ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள இளைஞர் நீதி குழுமத்திற்கு சமூகப்பணி உறுப்பினர்கள் நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பதவி மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்படும் அரசு பணி அல்ல.

1 நவ., 2026PR #959

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான நீதி கிடைக்கவும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம், 2012-ன் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை மட்டும் விசாரிப்பதற்காக, 26 புதிய சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கவும், மற்றும் போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு உருவாக்கும் இலக்குடன், போதை மருந்துகள் மற்றும் மன மயக்கப் பொருட்கள் சட்டம், 1985-ன் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை மட்டும் விசாரிப்பதற்கென, 4 புதிய சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கவும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு அரசு உத்தரவு

தமிழ்நாடு அரசு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான நீதி கிடைக்கவும், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம், 2012-ன் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை மட்டும் விசாரிப்பதற்காக 26 புதிய சிறப்பு நீதிமன்றங்களையும், போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு உருவாக்கும் இலக்குடன், போதை மருந்துகள் மற்றும் மன மயக்கப் பொருட்கள் சட்டம், 1985-ன் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை மட்டும் விசாரிப்பதற்கென 4 புதிய சிறப்பு நீதிமன்றங்களையும் அமைக்க உத்தரவிட்டுள்ளது.

6 அக்., 2026PR #798

தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் ஆட்சேர்ப்பு அறிவிப்பு

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் இயக்குநரகம், தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம், மாநில தத்தெடுப்பு வள நிறுவனம் மற்றும் WCD கட்டுப்பாட்டு அறை - குழந்தைகள் உதவி மையத்தில் பல்வேறு ஒப்பந்த மற்றும் தற்காலிகப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.