TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Cooperation

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Cooperation குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

22 அக்., 2026PR #889

ஒன்றிய அமைச்சர் அமித் ஷா அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், மாண்புமிகு ஒன்றிய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. அமித் ஷா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் நாட்டுக்கு சேவை செய்ய வாழ்த்தினார்.

23 செப்., 2026PR #722

மாண்புமிகு உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப.வெங்கடரமணன், மற்றும் மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு.வ.காந்திராஜ் ஆகியோர் தலைமையில் சென்னை அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி கூட்ட அரங்கில் பொதுவிநியோக திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம்

சென்னை அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி கூட்ட அரங்கில், மாண்புமிகு உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப.வெங்கடரமணன் மற்றும் மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. வ.காந்திராஜ் ஆகியோர் தலைமையில் பொது விநியோகத்திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொது விநியோகத்திட்ட கைப்பேசி ஆய்வு செயலி துவக்கி வைக்கப்பட்டது.

17 செப்., 2026PR #685

நுகர்வோர் கூட்டுறவு நிறுவனங்களுக்கான புதிய இணையவழி கொள்முதல் நடைமுறைகள் குறித்து மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. வ.காந்திராஜ் அவர்கள் ஆய்வு

நுகர்வோர் கூட்டுறவு நிறுவனங்களுக்கான பழைய கூட்டு கொள்முதல் குழு முறை கலைக்கப்பட்டு, புதிய இணையவழி கொள்முதல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. வ.காந்திராஜ் அவர்கள் இன்று (17.09.2026) தலைமைச் செயலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.