மாண்புமிகு உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப.வெங்கடரமணன், மற்றும் மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு.வ.காந்திராஜ் ஆகியோர் தலைமையில் சென்னை அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி கூட்ட அரங்கில் பொதுவிநியோக திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம்
சென்னை அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி கூட்ட அரங்கில், மாண்புமிகு உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப.வெங்கடரமணன் மற்றும் மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. வ.காந்திராஜ் ஆகியோர் தலைமையில் பொது விநியோகத்திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொது விநியோகத்திட்ட கைப்பேசி ஆய்வு செயலி துவக்கி வைக்கப்பட்டது.
விரிவான சுருக்கம்
சென்னை அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி கூட்ட அரங்கில், 22.09.2026 அன்று மாண்புமிகு உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப.வெங்கடரமணன் மற்றும் மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. வ.காந்திராஜ் ஆகியோர் தலைமையில் பொது விநியோகத்திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்கள், அனைத்து மாவட்ட துணைப்பதிவாளர்கள் (பொது விநியோகத் திட்டம்), குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையின் உயர் அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்ட கணினி மேலாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பொது விநியோகத் திட்ட செயல்பாடுகளான புதிய குடும்ப அட்டைகளுக்கான விண்ணப்பங்களுக்கு தீர்வு, புதிய நியாய விலைக் கடைகள் திறப்பு, நியாய விலைக் கடைகள் தணிக்கை மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கைப்பற்றுகை ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டன. சட்டப்பேரவையில் செய்யப்பட்ட அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, 22.09.2026 அன்று பொது விநியோகத்திட்ட கைப்பேசி ஆய்வு செயலி மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. இக்கூட்டத்தில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி பெ.அமுதா, இ.ஆ.ப., உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் அஜய் யாதவ், இ.ஆ.ப., கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் திருமதி ஜி.லதா, இ.ஆ.ப., குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையின் காவல் துறை தலைவர் திரு ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப., மற்றும் பொது விநியோகத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய அறிவிப்புகள்
- 1பொது விநியோகத் திட்ட செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம்
- 2பொது விநியோகத்திட்ட கைப்பேசி ஆய்வு செயலி துவக்கம்