TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Cricket

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Cricket குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

3 அக்., 2026PR #792

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் கிரிக்கெட் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய ஆடவர் அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் வாஷிங்டன் சுந்தர் அவர்களுக்கும் வாழ்த்துத் தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு

ஜப்பானில் நடைபெற்றுவரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் கிரிக்கெட் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய ஆடவர் அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் அவர்களின் சாதனையைப் பாராட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக .75 இலட்சம் வழங்கப்படும்.

7 ஜூலை, 2026PR #347

முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் திரு. மகேந்திர சிங் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவரது ஊக்கமளிக்கும் பயணம், தலைமைத்துவம் மற்றும் மாநிலத்தின் விளையாட்டு உணர்விற்கு அவர் அளித்த பங்களிப்பை முதலமைச்சர் பாராட்டினார்.