#Infrastructure
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Infrastructure குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
அடையாறு ஆறு மற்றும் தெற்கு பக்கிங்ஹாம் கால்வாய் தூர்வாரும் பணி: மாண்புமிகு முதலமைச்சர் உத்தரவுப்படி அமைச்சர் திரு.என்.ஆனந்த் தொடங்கி வைத்து ஆய்வு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவுப்படி, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.என்.ஆனந்த் அவர்கள் சென்னை மாவட்டம், ஆலந்தூர் வட்டம், மணப்பாக்கம் கிராமம் அடையாறு ஆற்றுப்பகுதியினை தூர்வாரி சீரமைக்கும் பணி மற்றும் சோழிங்கநல்லூர் வட்டம், தெற்கு பக்கிங்ஹாம் கால்வாயில் தூர்வாரி சீரமைக்கும் பணியை தொடங்கி வைத்து களப்பணியை ஆய்வு செய்தார்.
சென்னை மாவட்டத்தில் கூவம் ஆறு மற்றும் ஒக்கியம் மடு தூர்வாரும் பணியை அமைச்சர் என். ஆனந்த் தொடங்கி வைத்தார்
முதலமைச்சரின் உத்தரவுப்படி, சென்னை மாவட்டத்தில் பாடிக்குப்பம் அருகே கூவம் ஆறு மற்றும் ஒக்கியம் துரைப்பாக்கம் அருகே ஒக்கியம் மடு தூர்வாரும் பணியை அமைச்சர் என். ஆனந்த் தொடங்கி வைத்தார். இது நீர் ஓட்டத்தை மேம்படுத்தி வெள்ளத்தைத் தடுக்கும் நோக்கம் கொண்டது.
ரூ. 2.75 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட அறிஞர் அண்ணா நீச்சல் குளம் மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் ரூ. 2.75 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட அறிஞர் அண்ணா நீச்சல் குளம், மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்களால் இன்று (23.07.2026) திறந்து வைக்கப்பட்டது.
சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜூனா அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.
சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜூனா தலைமையில் இன்று நடைபெற்றது. பல்வேறு துறைகளின் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.
அமைச்சர் செ. கமலி கால்நடை மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய மாணவியர் விடுதிக் கட்டடங்களைத் திறந்து வைத்தார்
கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் திருமதி செ. கமலி அவர்கள், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் திருநெல்வேலி மற்றும் ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரிகளுக்காக புதிதாகக் கட்டப்பட்ட மாணவியர் விடுதிக் கட்டடங்களை சென்னை, மாதவரத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். மொத்தம் ரூ.931.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த விடுதிகள், மாணவியர்கள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் தங்கி கல்வி பயில அனைத்து அடிப்படை வசதிகளையும் கொண்டுள்ளன.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் "நலம் TN" என்ற தமிழ்நாடு சுகாதார அறக்கட்டளை இணையதளத்தைத் தொடங்கி வைத்து, ரூ.139.47 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கட்டடங்கள் மற்றும் நவீன மருத்துவ உபகரணங்களை பயன்பாட்டிற்குக் கொண்டு வந்ததுடன், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 751 உதவி மருத்துவர்கள் மற்றும் 1,393 சுகாதார ஆய்வாளர்கள் (நிலை-ll) ஆகியோருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் "நலம் TN" இணையதளத்தைத் தொடங்கி வைத்து, ரூ.139.47 கோடி மதிப்பிலான மருத்துவக் கட்டடங்கள் மற்றும் உபகரணங்களைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்ததுடன், 751 உதவி மருத்துவர்கள் மற்றும் 1,393 சுகாதார ஆய்வாளர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
உலகத் தரத்திலான நவீன தொழில்நுட்பத்தை தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நடைமுறைப்படுத்திட தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB Ltd) – ஐஐடி, சென்னை (IIT Madras) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி. டி. ஆர். நிர்மல் குமார் அவர்கள் முன்னிலையில் கையெழுத்தானது.
இன்று (09.07.2026) சென்னையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி. டி. ஆர். நிர்மல் குமார் அவர்கள் முன்னிலையில், தமிழ்நாட்டின் மின்கட்டமைப்பை தொழில்நுட்ப ரீதியாக வலுப்படுத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒருங்கிணைப்பை மேம்படுத்தி, மின் சேவைகளின் நம்பகத்தன்மை, செயல்திறன் மற்றும் தரத்தினை உயர்த்தும் நோக்கில், தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB Ltd) மற்றும் இந்திய தொழில்நுட்பக் கழகம், சென்னை (IIT Madras) ஆகியவற்றுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது.
மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. செ. ராஜேஷ் குமார் அவர்களின் தலைமையில் சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றுலா வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. செ. ராஜேஷ் குமார் தலைமையில், சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சுற்றுலா வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அடிப்படை வசதிகள், பாதுகாப்பு, ஆன்லைன் டிக்கெட் போன்ற மேம்பாட்டுப் பணிகள் குறித்தும், பல்வேறு சுற்றுலா சேவைகளை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மாண்புமிகு முதலமைச்சர் நெம்மேலி மற்றும் பேரூரில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் மற்றும் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார்
மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், நெம்மேலியில் இயங்கிவரும் 110 மற்றும் 150 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்களின் செயல்பாடுகளையும், பேரூரில் ₹5814.57 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுவரும் 400 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டப்பள்ளியில் ரூ. 24.71 கோடி மதிப்பீட்டில் புதிய நவீன மாணவர் விடுதிக் கட்டடத்திற்கு மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர்.நிர்மல் குமார் அவர்கள் அடிக்கல் நாட்டினார்!
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் பெருங்குடி வளாகத்தில், ரூ. 24.71 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள புதிய நவீன மாணவர் விடுதிக் கட்டடத்திற்கு மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார்.
ரூ.127.21 கோடியில் கொள்முதல் செய்யப்பட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் 300 புதிய பேருந்துகளின் சேவை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்கள்.
மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் ரூ.127.21 கோடி மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் 300 புதிய பேருந்துகளின் சேவையைத் தொடங்கி வைத்தார்.
செய்தி வெளியீடு: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி மாண்புமிகு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் தலைமையில் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் தலைமையில் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் (சிப்காட்) பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.