TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Skill Training

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Skill Training குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

22 ஆக., 2026PR #573

சென்னை அசோக் நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் செயல்படும் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக இன்று (22.08.2026) சென்னை அசோக் நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் திரு. என்.ஆனந்த் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஜா.முகமது பர்வேஸ் ஆகியோர்களின் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் 283 தனியார் துறை நிறுவனங்களும் 10 திறன் பயிற்சியளிக்கும் நிறுவனங்களும் கலந்து கொண்டன. 9671 வேலைநாடுநர்கள் பங்கேற்றனர், இதில் 2973 நபர்களுக்கு பணிநியமனம் வழங்கப்பட்டது.

17 ஜூன், 2026PR #241

3 நாட்கள் அலைபேசி பழுதுபார்த்தல் மற்றும் சேவை பயிற்சித் திட்டம்

தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN), சென்னை, ஜூன் 23 முதல் 25, 2026 வரை 3 நாட்கள் அலைபேசி பழுதுபார்த்தல் மற்றும் சேவை பயிற்சித் திட்டத்தை நடத்துகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட, குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.