TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

வேலைவாய்ப்பு முகாம்

சென்னை அசோக் நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் செயல்படும் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக இன்று (22.08.2026) சென்னை அசோக் நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் திரு. என்.ஆனந்த் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஜா.முகமது பர்வேஸ் ஆகியோர்களின் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் 283 தனியார் துறை நிறுவனங்களும் 10 திறன் பயிற்சியளிக்கும் நிறுவனங்களும் கலந்து கொண்டன. 9671 வேலைநாடுநர்கள் பங்கேற்றனர், இதில் 2973 நபர்களுக்கு பணிநியமனம் வழங்கப்பட்டது.

விரிவான சுருக்கம்

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் செயல்படும் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக இன்று (22.08.2026) சென்னை அசோக் நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் திரு. என்.ஆனந்த் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஜா.முகமது பர்வேஸ் ஆகியோர்களின் தலைமையில் நடைபெற்றது. KALEESWARI REFINERY PVT LTD, MRF LIMITED, ASHOK LEYLAND, BANDHAN BANK, BHARTHI AIRTEL, TAFE, MIOT INTERNATIONAL HOSPITAL, AXLES INDIA, L&T, ZF COMMERCIAL VEHICLE CONTROL SYSTEM, AXES BANK, TECH MAHINDRA FOUNDATION MFT, ROYAL ENFIELD, WHEELS INDIA LIMITED, RAMRAJ COTTON போன்ற முன்னணி நிறுவனங்கள் உள்ளிட்ட 283 தனியார் துறை வேலையளிக்கும் நிறுவனங்களும் 10 திறன் பயிற்சியளிக்கும் நிறுவனங்களும் கலந்து கொண்டன. இம்முகாமில் பங்கேற்றதில் 9671 வேலைநாடுநர்கள் பதிவு செய்து பல்வேறு நிறுவனங்களின் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டனர். இதில் 25 மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 2973 (ஆண்கள் 1828 பெண்கள் 1145) வேலைநாடுநர்கள் பணிநியமனமும், முதற்கட்ட நேர்முகத்தேர்வில் 316 நபர்கள் (ஆண்கள் 190 பெண்கள் 126) தேர்ச்சிபெற்று இரண்டாம் கட்ட தேர்வுக்குமென தகுதிபெற்று மொத்தம் 3289 நபர்கள் பயன் பெற்றனர். திறன் பயிற்சிக்காக 57 வேலைநாடுநர்களும், அயல் நாட்டு வேலைவாய்ப்பிற்காக 97 வேலைநாடுநர்களும் பதிவு செய்து பயன்பெற்றனர். மேலும் உள அளவை மதிப்பீட்டு சோதனையில் 21 நபர்கள் பயன்பெற்றுள்ளனர். மாண்புமிகு அமைச்சர்கள் பணி நியமன ஆணைகளை வழங்கி விழா பேருரையாற்றினர். இம்முகாமில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் அரசு செயலாளர் திரு.கொ.வீரராகவ ராவ், இ.ஆ.ப., வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இயக்குநர் டாக்டர். சி.பழனி, இ.ஆ.ப., சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. துறைஸ்.மாலதி ஹெலன், இ.ஆ.ப., சென்னை மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) திருமதி.ஆ.அனிதா, சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் திருமதி.ம.மகேஸ்வரி மற்றும் துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    283 தனியார் துறை வேலையளிக்கும் நிறுவனங்களும் 10 திறன் பயிற்சியளிக்கும் நிறுவனங்களும் கலந்து கொண்டன.
  • 2
    9671 வேலைநாடுநர்கள் பதிவு செய்து பல்வேறு நிறுவனங்களின் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டனர்.
  • 3
    25 மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 2973 வேலைநாடுநர்கள் பணிநியமனம் பெற்றனர்.
  • 4
    316 நபர்கள் முதற்கட்ட நேர்முகத்தேர்வில் தேர்ச்சிபெற்று இரண்டாம் கட்ட தேர்வுக்கு தகுதிபெற்றனர்.
  • 5
    57 வேலைநாடுநர்கள் திறன் பயிற்சிக்காகவும், 97 வேலைநாடுநர்கள் அயல் நாட்டு வேலைவாய்ப்பிற்காகவும் பதிவு செய்தனர்.
  • 6
    21 நபர்கள் உள அளவை மதிப்பீட்டு சோதனையில் பயன்பெற்றனர்.

Archive navigation

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்