#Stormwater Drains
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Stormwater Drains குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், இ.ஆ.ப., அவர்கள், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை சென்னையில் ஆய்வு
தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், இ.ஆ.ப., அவர்கள், சென்னை மாநகராட்சியின் அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள், ஏரி மற்றும் கால்வாயில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி உள்ளிட்ட பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். செப்டம்பர் மாத இறுதிக்குள் பணிகளை முடிக்க உத்தரவிட்டார்.
சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜூனா அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.
சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜூனா தலைமையில் இன்று நடைபெற்றது. பல்வேறு துறைகளின் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.