#Transparency
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Transparency குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
கடந்த ஆட்சியில் தனிநபர்/ ஒரு நிறுவனத்திற்கு மட்டும் மின் வாரிய முக்கிய பணிகள் - ஒப்பந்தாரர்கள் புகார். இனிவரும் காலங்களில் வெளிப்படையான நிர்வாகத்தின் அடிப்படையில் தகுதியுள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் பணிகள் வழங்கப்படும் மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் உறுதி.
இன்று (25.05.2026) சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு மின்வாரியத்துடன் தொடர்புடைய ஒப்பந்ததாரர்கள், மின் உபகரண விநியோகஸ்தர்கள், வழங்குநர்கள் மற்றும் கொள்முதல் செய்பவர்கள் உள்ளிட்ட சுமார் 1000 பேருடன் வெளிப்படையான நிர்வாகம் மற்றும் முறைகேடுகள் தடுப்பு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மனிதவள மேலாண்மைத் துறை திட்டங்கள் குறித்து அமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
மாண்புமிகு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. த. சரத்குமார் தலைமையில் மனிதவள மேலாண்மைத் துறை சார்ந்த திட்டங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது. காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்பவும், போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கவும், ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்யவும் அமைச்சர் அறிவுறுத்தினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற பின்னர், திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் ஆற்றிய உரை.
சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் ஆற்றிய உரை. இதில், அவர் மக்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்து, வெளிப்படையான, ஊழலற்ற மற்றும் மக்கள் நலன் சார்ந்த ஆட்சியை வழங்குவதாக உறுதியளித்தார்.