#Weightlifting
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Weightlifting குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான வலுதூக்குதல் போட்டியில், 67 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை கஸ்தூரி ராஜாமணி அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான வலுதூக்குதல் போட்டியில், 67 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள வீராங்கனை கஸ்தூரி ராஜாமணி அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.50 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் - 2026ல் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்கள் திரு. ராஜா முத்துப்பாண்டி, திரு. பிரவீன் சித்திரவேல் மற்றும் திரு. செல்வ பிரபு ஆகியோருக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூ.80 இலட்சத்திற்கான காசோலைகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் வழங்கினார்
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழ்நாட்டு வீரர்களான ராஜா முத்துப்பாண்டி, பிரவீன் சித்திரவேல் மற்றும் செல்வ பிரபு ஆகியோருக்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் ரூ.80 இலட்சம் ஊக்கத்தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற திரு. ராஜா முத்துப்பாண்டி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு.
மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான 65 கிலோ பளுதூக்கும் எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற திரு. ராஜா முத்துப்பாண்டி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, தமிழ்நாடு அரசின் சார்பில் 30 இலட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்தார்.