மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. பெ.விஸ்வநாதன் அவர்கள் தலைமையில் 2026-2027-ஆம் ஆண்டிற்கான உயர்கல்வித் துறை மானிய கோரிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
இன்று (06.08.2026) தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. பெ.விஸ்வநாதன் அவர்கள் தலைமையில் 2026-2027-ஆம் ஆண்டிற்கான உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
விரிவான சுருக்கம்
மாண்புமிகு அமைச்சர் அவர்கள் உயர்கல்வித் துறையின் செயல்பாடுகள், முன்னெடுக்க உள்ள திட்டங்கள் குறித்தும், உயர்கல்வித் துறையின் 2026-2027-ஆம் ஆண்டிற்கான கொள்கை விளக்கக் குறிப்பு, துறையின் அறிவிப்புகள், மானியக் கோரிக்கை மற்றும் பிற முக்கியமான பொருண்மைகள் ஆகியவை குறித்தும் துறை தலைவர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார். இக்கூட்டத்தில், உயர்கல்வித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.தீரஜ் குமார், இ.ஆ.ப., தமிழ்நாடு ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆணையர் திருமதி.எஸ்.மலர்விழி, இ.ஆ.ப., கல்லூரிக் கல்வி ஆணையர் திரு.பா.பொன்னையா, இ.ஆ.ப., உயர்கல்வித் துறை சிறப்புச் செயலாளர் திருமதி. ரஷ்மி சித்தார்த் ஜகடே, இ.ஆ.ப., அறிவியல் நகர துணைத் தலைவர் முனைவர் எஸ்.விசாகன், இ.ஆ.ப., தொழில்நுட்பக் கல்வி ஆணையர் திரு.பொ.இரத்தினசாமி, இ.ஆ.ப., பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள் மற்றும் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய அறிவிப்புகள்
- 12026-2027 ஆம் ஆண்டிற்கான உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை தொடர்பான ஆலோசனை
- 2உயர்கல்வித் துறையின் செயல்பாடுகள், முன்னெடுக்க உள்ள திட்டங்கள் குறித்தும் ஆலோசனை
- 32026-2027 ஆம் ஆண்டிற்கான கொள்கை விளக்கக் குறிப்பு, துறையின் அறிவிப்புகள் மற்றும் பிற முக்கியமான பொருண்மைகள் குறித்து துறை தலைவர்களிடம் ஆலோசனை