தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் வருகின்ற 29.08.2026 அன்று eKYC சிறப்பு முகாம்
குடும்ப அட்டைதாரர்களுக்கான eKYC பதிவினை 100% நிறைவு செய்ய, 29.08.2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு eKYC முகாம் நடைபெறும்.
விரிவான சுருக்கம்
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன் படி, முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளின் ஆதார் விவரங்களை சரிபார்க்க, மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் கை ரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை (eKYC) மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. குடும்ப உறுப்பினர்களுக்கான eKYC கை ரேகை சரிபார்ப்பு பணி அக்டோபர் 2023 முதல் நடைபெற்று வருகிறது. தற்போது, முன்னுரிமை குடும்ப அட்டைகளில் 96.21% eKYC பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த eKYC பதிவினை 100% நிறைவு செய்ய, 29.08.2026 அன்று காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை தமிழகத்திலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடைபெறும். இதுவரை நியாயவிலைக் கடைகள் மூலம் கை ரேகைப் பதிவு (eKYC) செய்யப்படாமல் விடுபட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள், இந்த சிறப்பு முகாமினைப் பயன்படுத்தி தங்களது கை ரேகைப் பதிவினை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முக்கிய அறிவிப்புகள்
- 129.08.2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழகத்திலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு eKYC முகாம் நடைபெறும்.
- 2விடுபட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் 29.08.2026 அன்று நடைபெறும் சிறப்பு முகாமினைப் பயன்படுத்தி தங்களது கை ரேகைப் பதிவினை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.