#Fair Price Shops
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Fair Price Shops குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம்
தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மாதந்தோறும் நடைபெறும் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம், அக்டோபர் 2026 மாதத்திற்கான முகாம் சென்னையில் 10.10.2026 அன்று நடைபெறும். குடும்ப அட்டை தொடர்பான சேவைகள் மற்றும் புகார்களுக்கு தீர்வு வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் e-KYC மேற்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொருட்கள் வழங்குவது முடக்கப்படமாட்டாது என தமிழ்நாடு அரசு அறிவிப்பு
e-KYC மேற்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதை நிறுத்தவோ, தடை செய்யவோ கூடாது என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் 6 மாத கால தடை உத்தரவு இருந்தபோதிலும், மாநில அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளில் நாளை (26.09.2026) கை ரேகைப் பதிவு (eKYC) சிறப்பு முகாம்
மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, குடும்ப அட்டைதாரர்களுக்கான eKYC பணியை 100% நிறைவு செய்யும் பொருட்டு, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் (இடைத்தேர்தல் நடைபெறும் பகுதிகளைத் தவிர்த்து) 26.09.2026 அன்று சிறப்பு eKYC முகாம் நடைபெறவுள்ளது.
மாண்புமிகு உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப.வெங்கடரமணன், மற்றும் மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு.வ.காந்திராஜ் ஆகியோர் தலைமையில் சென்னை அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி கூட்ட அரங்கில் பொதுவிநியோக திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம்
சென்னை அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி கூட்ட அரங்கில், மாண்புமிகு உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப.வெங்கடரமணன் மற்றும் மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. வ.காந்திராஜ் ஆகியோர் தலைமையில் பொது விநியோகத்திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொது விநியோகத்திட்ட கைப்பேசி ஆய்வு செயலி துவக்கி வைக்கப்பட்டது.
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் 19.09.2026 அன்று eKYC சிறப்பு முகாம்
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கான 100% eKYC பதிவினை நிறைவு செய்ய, 19.09.2026 அன்று தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. eKYC செய்யாத குடும்ப அட்டைதாரர்கள் இதில் பங்கேற்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த கிலோ ரூ.35/-க்கு வெங்காயம் விற்பனை தொடக்கம் -மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.ப.வெங்கடரமணன் மற்றும் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.வ.காந்திராஜன் ஆகியோர் விற்பனையை தொடங்கி வைத்தார்கள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மூலம் பொதுமக்களுக்கு தரமான வெங்காயம் குறைந்த விலையில் தடையின்றிக் கிடைக்கும் வகையில் சந்தை குறுக்கீட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெளிச்சந்தையில் அத்தியாவசியப் பொருளான வெங்காயத்தின் விலை உயர்ந்து வருவதைக் கட்டுப்படுத்தவும், ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக, தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை இணையம் (NAFED) மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (NCCF) ஆகியவற்றின் மூலம், முதற்கட்டமாக 1,000 மெட்ரிக் டன் வெங்காயம் மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கிலிருந்து தமிழ்நாடு அரசால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 03.09.2026 முதல் குடும்ப அட்டை ஒன்றுக்கு ஒரு கிலோ வீதம், கிலோ ரூ.35/- என்ற மானிய விலையில் தமிழ்நாடு முழுவதும் வெங்காயம் விற்பனை செய்யப்படும்.
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் வருகின்ற 29.08.2026 அன்று eKYC சிறப்பு முகாம்
குடும்ப அட்டைதாரர்களுக்கான eKYC பதிவினை 100% நிறைவு செய்ய, 29.08.2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு eKYC முகாம் நடைபெறும்.
நியாயவிலைக் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்
சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கான சிறப்பு இ-கேஒய் சி கைவிரல் ரேகை பதிவு முகாம் ஆகஸ்ட் 2, 2026 அன்று நடைபெறும்.
செய்தி வெளியீடு எண்: 409 - சென்னை வடக்கு மண்டலத்திற்குட்பட்ட 608 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப.வெங்கடரமணன் அவர்கள் வழங்கினார்.
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப.வெங்கடரமணன், சென்னை வடக்கு மண்டலத்திற்குட்பட்ட 608 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார். மேலும், அத்தியாவசியப் பொருட்களின் வெளிப்படைத்தன்மை மற்றும் நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடைவதை வலியுறுத்தினார்.
தாயுமானவர் திட்டத்தில் ஜூலை 4 மற்றும் 6 ஆகிய தேதிகளில் முதியோர் மாற்று திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருட்கள் விநியோகம்
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், ஜூலை 4 மற்றும் 6 ஆகிய தேதிகளில், சென்னை மாநகரில் உள்ள 18 மண்டலங்களில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு பொது விநியோகத்திட்ட அத்தியாவசியப் பொருட்களை நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் மூலம் வீடு தேடி விநியோகம் செய்யப்படும்.