TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

அரசு கூட்டம், வேளாண்மை, தொழில்

மாண்புமிகு வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் திரு.ர.வினோத் அவர்கள் தலைமையில் தனியார் சர்க்கரை ஆலைகளின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

மாண்புமிகு வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் திரு.ர.வினோத் அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் தனியார் சர்க்கரை ஆலைகளின் செயல்பாடுகள் மற்றும் முக்கிய பிரச்சனைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தனியார் சர்க்கரை ஆலைகளின் செயல்பாடுகள், கரும்பு விவசாயிகளின் நலன் மற்றும் சர்க்கரைத் தொழிலின் எதிர்கால வளர்ச்சி குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

விரிவான சுருக்கம்

சென்னை, நந்தனம், சர்க்கரைத்துறை ஆணையர் அலுவலகத்தில் 08.10.2026 அன்று மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் திரு.ர.வினோத் அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் தனியார் சர்க்கரை ஆலைகளின் செயல்பாடுகள் மற்றும் முக்கிய பிரச்சனைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தனியார் சர்க்கரை ஆலைகளின் செயல்பாடுகள், கரும்பு விவசாயிகளின் நலன் மற்றும் சர்க்கரைத் தொழிலின் எதிர்கால வளர்ச்சி குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. தனியார் சர்க்கரை ஆலைகளின் பிரதிநிதிகள் தங்களது ஆலைகளின் தற்போதைய செயல்பாடுகள், கரும்பு பதிவு, கரும்பு அரவை, கரும்பு கட்டுமானம், கரும்பு சாகுபடி பரப்பு, ஆலைகளின் உற்பத்தித் திறன் மற்றும் ஆலைகள் எதிர்கொள்ளும் பல்வேறு நடைமுறைகள் மற்றும் நிர்வாகப் பிரச்சனைகள் குறித்து மாண்புமிகு அமைச்சர் அவர்களிடம் விரிவாக எடுத்துரைத்தனர். தமிழ்நாடு அரசு கரும்பு விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டு, கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.709.50 சிறப்பு ஊக்கத்தொகை வழங்க அறிவித்தமைக்காக, அனைத்து தனியார் சர்க்கரை ஆலைகள் மற்றும் கரும்பு விவசாயிகள் சார்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர். மேலும், இச்சிறப்பு ஊக்கத்தொகை அறிவிப்பு கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கமளிப்பதுடன், மாநிலத்தில் கரும்பு சாகுபடி பரப்பினை அதிகரிக்கவும், சர்க்கரைத் தொழிலின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கவும் வழிவகுக்கும் என அவர்கள் தெரிவித்தனர். இக்கூட்டத்தில் உரையாற்றிய மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் திரு.ர.வினோத் அவர்கள், தமிழ்நாடு அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற குறுகிய காலத்திலேயே கரும்பு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு கரும்புக்கான விலையை உயர்த்தி, சிறப்பு ஊக்கத்தொகை அறிவித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் விரிவாக ஆலோசித்து, அவற்றின் நடைமுறைச் சாத்தியக்கூறுகள் மற்றும் அரசின் கொள்கை நிலைப்பாடுகள் குறித்து உரிய முறையில் ஆய்வு செய்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகுந்த தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாண்புமிகு அமைச்சர் தெரிவித்தார். கரும்பு விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படுவதுடன், சர்க்கரை ஆலைகள் சிறப்பாக இயங்குவதற்கான சாதகமான சூழலை உருவாக்குவதும் அரசின் முக்கிய நோக்கமாகும் எனவும் மாண்புமிகு அமைச்சர் தெரிவித்தார். இக்கூட்டத்தில், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை-உழவர் நலத்துறை செயலாளர் மரு.ந.சுப்பையன், இ.ஆ.ப., சர்க்கரைத்துறை ஆணையர் திரு.இரா.கண்ணன், இ.ஆ.ப., துறை அலுவலர்கள் மற்றும் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் தனியார் சர்க்கரை ஆலைகளின் தலைமை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.709.50 சிறப்பு ஊக்கத்தொகை வழங்க அறிவிப்பு.
  • 2
    கரும்பு விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படுவதுடன், சர்க்கரை ஆலைகள் சிறப்பாக இயங்குவதற்கான சாதகமான சூழலை உருவாக்குவதும் அரசின் முக்கிய நோக்கமாகும்.
  • 3
    தனியார் சர்க்கரை ஆலைகளின் கோரிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் விரிவாக ஆலோசித்து, அவற்றின் நடைமுறைச் சாத்தியக்கூறுகள் மற்றும் அரசின் கொள்கை நிலைப்பாடுகள் குறித்து ஆய்வு செய்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகுந்த தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

Archive navigation

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்